• Apr 19 2024

ஸ்வீடனில் உடலுறவு சாம்பியன்ஷிப் போட்டியா? வைரல் செய்தியின் உண்மைத் தன்மை என்ன? samugammedia

Chithra / Jun 5th 2023, 9:35 pm
image

Advertisement

எப்போதுமே வினோதமான செய்திகள் வேகமாக பரவுவதுடன் கடும் விவாதப் பொருளாகவும் மாறிவிடுகிறது. அப்படித்தான், ஸ்வீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் செய்தி வேகமாக பரவி வருகிறது. 

ஜூன் 8ம் தேதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்த செய்திகளில் பெரும்பாலான செய்திகள் ட்வீட்களை ஆதாரங்களாக காட்டியுள்ளன. இந்த தகவலைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.

ஆனால் ஸ்வீடனில் இருந்து அறிக்கையோ அல்லது சர்வதேச அளவிலான அறிக்கையோ வெளியாகாத நிலையில், இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.

அதாவது, ஸ்வீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் தகவலின்படி, செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான விண்ணப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

'ஸ்வீடன் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் டிராகன் பிராக்டிக் ஒரு சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார். 

உடலுறவானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார். 

எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஸ்வீடனில் உடலுறவு சாம்பியன்ஷிப் போட்டியா வைரல் செய்தியின் உண்மைத் தன்மை என்ன samugammedia எப்போதுமே வினோதமான செய்திகள் வேகமாக பரவுவதுடன் கடும் விவாதப் பொருளாகவும் மாறிவிடுகிறது. அப்படித்தான், ஸ்வீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் செய்தி வேகமாக பரவி வருகிறது. ஜூன் 8ம் தேதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திகளில் பெரும்பாலான செய்திகள் ட்வீட்களை ஆதாரங்களாக காட்டியுள்ளன. இந்த தகவலைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.ஆனால் ஸ்வீடனில் இருந்து அறிக்கையோ அல்லது சர்வதேச அளவிலான அறிக்கையோ வெளியாகாத நிலையில், இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.அதாவது, ஸ்வீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் தகவலின்படி, செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான விண்ணப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.'ஸ்வீடன் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் டிராகன் பிராக்டிக் ஒரு சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார். உடலுறவானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார். எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement