இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படும் நிலையில், அதில் இருந்த 62 பேரின் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது.
ஜகார்தாவில் உள்ள சொகர்னோ ஹட்டா Soekarno-Hattaவிமான நிலையத்தில் இருந்து, பாண்டியனாக் Pontianak என்ற இடத்துக்கு புறப்பட்ட, போயிங் 737-500 ரக விமானம் டேக் ஆப் ஆன 4 நிமிடங்களில் திடீரென ரேடார் கருவிகளின் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. இந்த விமானத்தில் 50 பயணிகளுடன், 12 விமான ஊழியர்கள் பயணித்தனர்.
10,900 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 250 அடி உயரத்திற்கு அதி வேகமாக கீழே இறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, கடலில் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் சத்தத்தை கேட்டதாக கூறும் இந்தோனேசிய மீனவர்கள், விமானத்தின் சில உடைந்த பாகங்களின் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
இதனால், விமானம் கடலில் விழுந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாகவும், விமானத்தில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கியிருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
பிற செய்திகள்
- அதிகாலையில் துணைவேந்தரின் நாடகம்; அடிக்கல் நாட்டினாலும் தூபி அமைக்கப்படாது; அம்பலப்படுத்தும் தகவல்!
- பிரபல அரசியல்வாதிக்கு கொரோனா:சற்றுமுன் வெளியான தகவல்!
- இன்று முற்றாக முடங்கிய வடக்கு கிழக்கு; கிளிநொச்சி நகரின் நிலை!
- யாழில் ஒரு கிராமம் அழியும் அபாயத்தில்!
- யாழ் பல்கலை மாணவர்களின் போராட்டத் திடலில் துணைவேந்தர்! போராட்டம் முற்று பெற்றதா? நடந்தது என்ன?
- யாழில் நினைவுத் தூபி இடித்தழிப்பு; கனடாவில் பாரிய அளவில் போராட்டம்..!
- கிழக்கில் 32 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது-விசேட அறிவித்தல்!
- யாழ்.பல்கலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை மோசமடைகின்றது..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்