ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சிக்குவாரா மைத்திரி?

366

கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இன்னும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தடுக்கக் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்தோடு, மார்ச் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை மூன்று நாட்களுக்கு இந்த மனுக்களை விசாரணை செய்ய நேற்று வெள்ளிக்கிழமை கூடிய 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முடிவு செய்துள்ளது.

புதிய ஆண்டு புதிய புகுக்சோங்’ உலகையே அதிரவைக்கும் வடகொரியா!

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பால் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டிய போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தது.

எனினும், தாக்குதல்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமையால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: