எங்களது இனத்தின் தேச விடுதலைக்காக தங்களது இன்னுயிரை ஆகுதியாக்கிய அத்தனை மாவீரர் செல்வங்களையும் ,இங்கே விதைத்து, அவர்களது கல்லறை கற்களை வழிபடுகின்ற தழிழருடைய வழிபாட்டிலே, அவர்களுடைய தியாகங்களை மதிக்கின்ற போற்றுகின்ற வரலாற்றை சிங்கள பௌத்த ஸ்ரீலங்கா பேரினவாத அரசு அழித்து ஒழித்திருக்கிறது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவினர் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அவ்விடத்திற்கு நேற்று மாலை நேரில் சென்று துயிலும் இல்ல பிரதேசத்தினை பார்வையிட்ட பின்னர் ,அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தெரிவித்ததாவது:
தமிழர் தாயகத்தில் உள்ள அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையும் இடித்து நொறுக்கி அள்ளி, எங்களது உறவுகள் தங்களது உறவுகளை நினைந்து நினைவேந்தல்களைக் கூட செய்யமுடியாதவாறு வரலாற்று முழுமையாக அழித்திருக்கக் கூடிய விடயமானது எங்களது நெஞ்சுக்கு மேலே ஏறி நின்று எங்களை அழித்ததிற்கு ஒப்பானதாக இருக்கிறது.
பல ஆயிரக்கணக்கான மாவீரர் செல்வங்களுடைய வித்துடல்களை தாங்கி நிற்கின்ற தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்கும்போது இருக்கின்ற உணர்வு வார்த்தைகளாலே வெளிப்படுத்த முடியாது என்றார்.
அத்துடன் அரசியல் கட்சிகள் தங்களுடைய கட்சி அரசியலுக்காக இந்த மாவீரர் செல்வங்களுடைய தியாகங்களை பயன்படுத்தவேண்டாம் என்று ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாவீரர்களை நினைப்பதற்கு கூட சிங்கள அரசு இடம் கொடுக்கவில்லை - வேலன் சுவாமிகள் எங்களது இனத்தின் தேச விடுதலைக்காக தங்களது இன்னுயிரை ஆகுதியாக்கிய அத்தனை மாவீரர் செல்வங்களையும் ,இங்கே விதைத்து, அவர்களது கல்லறை கற்களை வழிபடுகின்ற தழிழருடைய வழிபாட்டிலே, அவர்களுடைய தியாகங்களை மதிக்கின்ற போற்றுகின்ற வரலாற்றை சிங்கள பௌத்த ஸ்ரீலங்கா பேரினவாத அரசு அழித்து ஒழித்திருக்கிறது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவினர் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அவ்விடத்திற்கு நேற்று மாலை நேரில் சென்று துயிலும் இல்ல பிரதேசத்தினை பார்வையிட்ட பின்னர் ,அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தெரிவித்ததாவது:தமிழர் தாயகத்தில் உள்ள அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையும் இடித்து நொறுக்கி அள்ளி, எங்களது உறவுகள் தங்களது உறவுகளை நினைந்து நினைவேந்தல்களைக் கூட செய்யமுடியாதவாறு வரலாற்று முழுமையாக அழித்திருக்கக் கூடிய விடயமானது எங்களது நெஞ்சுக்கு மேலே ஏறி நின்று எங்களை அழித்ததிற்கு ஒப்பானதாக இருக்கிறது.பல ஆயிரக்கணக்கான மாவீரர் செல்வங்களுடைய வித்துடல்களை தாங்கி நிற்கின்ற தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்கும்போது இருக்கின்ற உணர்வு வார்த்தைகளாலே வெளிப்படுத்த முடியாது என்றார். அத்துடன் அரசியல் கட்சிகள் தங்களுடைய கட்சி அரசியலுக்காக இந்த மாவீரர் செல்வங்களுடைய தியாகங்களை பயன்படுத்தவேண்டாம் என்று ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.