• Mar 28 2024

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல நடிகையின் சகோதரி! பெரும் அதிர்ச்சியில் திரையுலகம்..!SamugamMedia

Sharmi / Mar 14th 2023, 11:33 am
image

Advertisement

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ''Shodhu Kuthe' ' என்ற படத்தின் மூலம் மராத்தி சினிமாவில் அறிமுகமானார் நடிகை பாக்யஸ்ரீ மோட்டே.

இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்த இவர், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.



இந்நிலையில் நடிகை பாக்யஸ்ரீ மோட்டேவின் சகோதரி மது மார்கண்டேயா சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது புனேவில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து பொலிஸார் குறிப்பிடுகையில்

 'மது மார்கண்டேயா பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வியாபாரத்தை அதிகரிக்கும் வகையில்இ தனது தோழியுடன் இடம் ஒன்றை பார்வையிடச் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் மதுவுக்கு திடீரென மயக்கம் வந்து சுருண்டு கீழே விழுந்ததாகவும், அவரை உடன் இருந்த தோழி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது மது இறந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும் அவரது முகத்தில் காயங்கள் காணப்பட்டதாக கூறப்படுவதால் இது கொலையாக இருக்கலாம் என பலரிடையும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் பாக்யஸ்ரீ மோட்டே சகோதரி மது மார்கண்டேயா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "எனது சகோதரி இல்லாமல் அனைத்தும் முற்றிலும் தொலைந்துவிட்டதாக" அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது "என் அன்பு சகோதரி இந்த உலகத்தில் இருந்து விடைபெறுகிறாள். என் அம்மா, சகோதரி, நண்பர், நம்பிக்கையாளர் மற்றும் என்ன இல்லை?  அவள் என் அடித்தளம், என் முழு இருப்பின் மையம் மது தான்" எனவும் மிகவும் வருத்தத்துடன் சகோதரி பற்றி குறிப்பிட்டுள்ளார்.


அத்தோடு "நீ இல்லாத இந்த வாழ்க்கையில்நான் என்ன செய்வது? இப்படியான சூழலை எதிர்கொள்ள நீங்கள் எனக்கு ஒருபோதும் சொல்லி கொடுக்கவில்லை. மரணம் உண்மைதான். ஆனால் நான் உன்னை விடமாட்டேன்" எனவும் நடிகை பாக்யஸ்ரீ மோட்டே தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் பிரபல நடிகையின் சகோதரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல நடிகையின் சகோதரி பெரும் அதிர்ச்சியில் திரையுலகம்.SamugamMedia கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ''Shodhu Kuthe' ' என்ற படத்தின் மூலம் மராத்தி சினிமாவில் அறிமுகமானார் நடிகை பாக்யஸ்ரீ மோட்டே. இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்த இவர், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பாக்யஸ்ரீ மோட்டேவின் சகோதரி மது மார்கண்டேயா சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது புனேவில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் குறிப்பிடுகையில் 'மது மார்கண்டேயா பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வியாபாரத்தை அதிகரிக்கும் வகையில்இ தனது தோழியுடன் இடம் ஒன்றை பார்வையிடச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் மதுவுக்கு திடீரென மயக்கம் வந்து சுருண்டு கீழே விழுந்ததாகவும், அவரை உடன் இருந்த தோழி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது மது இறந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அவரது முகத்தில் காயங்கள் காணப்பட்டதாக கூறப்படுவதால் இது கொலையாக இருக்கலாம் என பலரிடையும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் பாக்யஸ்ரீ மோட்டே சகோதரி மது மார்கண்டேயா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "எனது சகோதரி இல்லாமல் அனைத்தும் முற்றிலும் தொலைந்துவிட்டதாக" அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது "என் அன்பு சகோதரி இந்த உலகத்தில் இருந்து விடைபெறுகிறாள். என் அம்மா, சகோதரி, நண்பர், நம்பிக்கையாளர் மற்றும் என்ன இல்லை  அவள் என் அடித்தளம், என் முழு இருப்பின் மையம் மது தான்" எனவும் மிகவும் வருத்தத்துடன் சகோதரி பற்றி குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு "நீ இல்லாத இந்த வாழ்க்கையில்நான் என்ன செய்வது இப்படியான சூழலை எதிர்கொள்ள நீங்கள் எனக்கு ஒருபோதும் சொல்லி கொடுக்கவில்லை. மரணம் உண்மைதான். ஆனால் நான் உன்னை விடமாட்டேன்" எனவும் நடிகை பாக்யஸ்ரீ மோட்டே தெரிவித்துள்ளார்.எது எவ்வாறாயினும் பிரபல நடிகையின் சகோதரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement