முதல் முறையாக விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்? –குஷியில் ரசிகர்கள்..!

301

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.இறுதியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் பெரும் வசூலை பெற்றது.

மேலும் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது ஜார்ஜியாவில் படமாகி வருகின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு பாடலும் எழுத இருப்பதாக தகவல் கசிந்த வண்ணம் உள்ளது.

அத்தோடு நெல்சன் மற்றும் அனிருத் கூட்டணியில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியது தொடர்ந்து தளபதி 65 படத்தில் அவர் பாடல் எழுத உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எனினும் இதன் மூலம் தளபதி விஜயுடன் முதல் முறையாக கூட்டணி அமைக்கிறார் சிவகார்த்திகேயன்.இவர்கள் இருவரும் இணைவது விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி உள்ளது.

தற்பொழுத இந்த செய்தி சமூகவரலத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.