• Apr 19 2024

கிரிக்கட் மட்டையால் தந்தை தாக்கி கொலை செய்த மகன்! SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 12:58 pm
image

Advertisement


மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் கிரிக்கட் மட்டடையால் கடுமையாக தாக்கப்பட்ட தந்தை பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 16ம் திகதி தன்னை கிரிக்கட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டடைப் பதிவு செய்த அவர் தனது மனைவி சகிதம் வீட்டைவிட்டு வெளியேறி கல்லடியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.

18ம் திகதி குறித்த விடுதியிலிருந்து வெளியேறிய அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 21ம் திகதி குறித்த நபர் மரணமடைந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து தீவர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சகிதம் மரணமானவரின் வீடு மற்றும் தங்கியிருந்த தனியார் விடுதி போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் போதனா வைத்தியசாலையில் வைக்கபபட்டுள்ள சடலத்தையும் பார்வையிட்டு பிரதேச பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இன்று(23) அவரது பிரேத பரிசோதனை இடம்பெறுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.அப்துர் றஹீம் தெரிவித்தார்.

பலியானவர் 65 வயதுடைய கடுசப்பிள்னை கருணாகரன் என்ற ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கிரிக்கட் மட்டையால் தந்தை தாக்கி கொலை செய்த மகன் SamugamMedia மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் கிரிக்கட் மட்டடையால் கடுமையாக தாக்கப்பட்ட தந்தை பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கடந்த 16ம் திகதி தன்னை கிரிக்கட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டடைப் பதிவு செய்த அவர் தனது மனைவி சகிதம் வீட்டைவிட்டு வெளியேறி கல்லடியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.18ம் திகதி குறித்த விடுதியிலிருந்து வெளியேறிய அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 21ம் திகதி குறித்த நபர் மரணமடைந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.இதனையடுத்து தீவர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சகிதம் மரணமானவரின் வீடு மற்றும் தங்கியிருந்த தனியார் விடுதி போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் போதனா வைத்தியசாலையில் வைக்கபபட்டுள்ள சடலத்தையும் பார்வையிட்டு பிரதேச பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.இன்று(23) அவரது பிரேத பரிசோதனை இடம்பெறுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.அப்துர் றஹீம் தெரிவித்தார்.பலியானவர் 65 வயதுடைய கடுசப்பிள்னை கருணாகரன் என்ற ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement