5 இலட்சம் டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்க தென்கொரியா தீர்மானம்

147

கொரோனா தொற்றை வெற்றி பெறுவதற்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு தென்கொரியா தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கான தென்கொரிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அவற்றில் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் அடங்கியுள்ளதாக தென்கொரிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்கொரியாவினால் இலங்கைக்கு 3 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: