• Apr 20 2024

உலகையே மிரளவைத்த சோவியத் ரஸ்யாவின் பதிலடி -‘முன்னெச்சரிக்கை’ தாக்குதல்.!

Tamil nila / Dec 11th 2022, 3:30 pm
image

Advertisement

தங்கள் மீது தாக்குதல் நடத்தும் எதிரியின் திறனை முன்கூட்டியே அழிக்கும் அமெரிக்காவின் தாக்குதல் பாணியை தாங்களும் பின்பற்றலாம் என்று ரஸ்ய அதிபா் விளாடிமீா் புடின் கூறியுள்ளாா்.

இதன் மூலம், நேட்டோவுடன் மோதல் தொடங்குவதற்கு முன்னதாகவே அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அவா் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.


கிா்கிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, நேட்டோ அமைப்புடன் அணு ஆயுதப் போா் மூள்வதற்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக கடந்த வாரம் விளாடிமீா் புடின் கூறியது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

மேலும், எதிா்காலத்தில் எதிரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறாா்கள் என்ற சந்தேகம் எழுந்தால், அவா்களது தாக்குதல் திறனை முறியடிக்கும் வகையில் முன்கூட்டியே தாக்குதல் நடத்தும் ராணுவ உத்தியை அமெரிக்கா பின்பற்றி வருகிறது.

அது மட்டுமின்றி, எதிரிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கான தாக்குதல் நுட்பத்தையும் அமெரிக்கா வடிவமைத்து வருகிறது.

தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்கிறது.

அதே போன்ற உத்திகளை கடைப்பிடிப்பது குறித்து நாங்களும் பரிசீலித்து வருகிறோம்.

நம்முடைய எதிரியாகக் கூடிய ஒரு நாடு தங்களால் முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்த முடியும் என்று கருதும்போது, நாமும் அவ்வாறு கருதாமல் இருக்க முடியாது.

அத்தகைய தாக்குதல் நடத்துவதற்கான துல்லியம் மற்றும் செயல்திறனில் அமெரிக்காவின் ஏவுகணைகளை ரஸ்யாவின் ஏவுகணைகள் விஞ்சி நிற்கின்றன என்றாா் விளாடிமீா் புடின்.


தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஸ்யா கூறி வருகிறது.


எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த நாட்டின் மீது ரஸ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.


அதற்கு முன்னதாக, இந்தப் போரில் எந்த நாடாவது உக்ரைனுக்கு ஆதரவாக தலையிட்டால் அவை வரலாறு காணாத பேரழிவைச் சந்திக்க வேண்டும் என்று விளாடிமீா் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.


அதையும் மீறி, போரில் தங்களுக்கு எதிராக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புவது, உக்ரைன் வீரா்களுக்கு போா்ப் பயிற்சியளிப்பது, தங்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் அளிப்பது மூலம் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்பதாக ரஸ்யா குற்றம் சாட்டி வருகிறது.


உக்ரைன் தொடா்பான நேட்டோ நிலைகள் மீது தாக்குதல் நடத்த தங்களுக்கு சட்ட உரிமை உள்ளதாக ரஸ்யா கூறுகிறது.


இந்தச் சூழலில், உக்ரைனின் குறிப்பிட்ட பகுதியில் தற்போது நடைபெற்று வரும் போா் சிறு தவறு நோ்ந்தால்கூட நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான மிகப் பெரிய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் உள்ள நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் அண்மையில் அச்சம் தெரிவித்திருந்தாா்.


இந்த நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகள் மீது முன்கூட்டியே அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அதிபா் புடின் தற்போது மறைமுகமாக எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


உலகையே மிரளவைத்த சோவியத் ரஸ்யாவின் பதிலடி -‘முன்னெச்சரிக்கை’ தாக்குதல். தங்கள் மீது தாக்குதல் நடத்தும் எதிரியின் திறனை முன்கூட்டியே அழிக்கும் அமெரிக்காவின் தாக்குதல் பாணியை தாங்களும் பின்பற்றலாம் என்று ரஸ்ய அதிபா் விளாடிமீா் புடின் கூறியுள்ளாா்.இதன் மூலம், நேட்டோவுடன் மோதல் தொடங்குவதற்கு முன்னதாகவே அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அவா் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.கிா்கிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, நேட்டோ அமைப்புடன் அணு ஆயுதப் போா் மூள்வதற்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக கடந்த வாரம் விளாடிமீா் புடின் கூறியது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.மேலும், எதிா்காலத்தில் எதிரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறாா்கள் என்ற சந்தேகம் எழுந்தால், அவா்களது தாக்குதல் திறனை முறியடிக்கும் வகையில் முன்கூட்டியே தாக்குதல் நடத்தும் ராணுவ உத்தியை அமெரிக்கா பின்பற்றி வருகிறது.அது மட்டுமின்றி, எதிரிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கான தாக்குதல் நுட்பத்தையும் அமெரிக்கா வடிவமைத்து வருகிறது.தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்கிறது.அதே போன்ற உத்திகளை கடைப்பிடிப்பது குறித்து நாங்களும் பரிசீலித்து வருகிறோம்.நம்முடைய எதிரியாகக் கூடிய ஒரு நாடு தங்களால் முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்த முடியும் என்று கருதும்போது, நாமும் அவ்வாறு கருதாமல் இருக்க முடியாது.அத்தகைய தாக்குதல் நடத்துவதற்கான துல்லியம் மற்றும் செயல்திறனில் அமெரிக்காவின் ஏவுகணைகளை ரஸ்யாவின் ஏவுகணைகள் விஞ்சி நிற்கின்றன என்றாா் விளாடிமீா் புடின்.தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஸ்யா கூறி வருகிறது.எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த நாட்டின் மீது ரஸ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.அதற்கு முன்னதாக, இந்தப் போரில் எந்த நாடாவது உக்ரைனுக்கு ஆதரவாக தலையிட்டால் அவை வரலாறு காணாத பேரழிவைச் சந்திக்க வேண்டும் என்று விளாடிமீா் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.அதையும் மீறி, போரில் தங்களுக்கு எதிராக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புவது, உக்ரைன் வீரா்களுக்கு போா்ப் பயிற்சியளிப்பது, தங்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் அளிப்பது மூலம் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்பதாக ரஸ்யா குற்றம் சாட்டி வருகிறது.உக்ரைன் தொடா்பான நேட்டோ நிலைகள் மீது தாக்குதல் நடத்த தங்களுக்கு சட்ட உரிமை உள்ளதாக ரஸ்யா கூறுகிறது.இந்தச் சூழலில், உக்ரைனின் குறிப்பிட்ட பகுதியில் தற்போது நடைபெற்று வரும் போா் சிறு தவறு நோ்ந்தால்கூட நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான மிகப் பெரிய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் உள்ள நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் அண்மையில் அச்சம் தெரிவித்திருந்தாா்.இந்த நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகள் மீது முன்கூட்டியே அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அதிபா் புடின் தற்போது மறைமுகமாக எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement