• Apr 24 2024

மீண்டும் எழுச்சி கொள்ள தயாராகும் தமிழர் தாயகம் - பல்கலை மாணவர்கள் முல்லையில் ஒன்றுகூடல்!

Tamil nila / Jan 28th 2023, 11:08 pm
image

Advertisement

சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து, போராட்டம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.




இதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். தமிழர் தாயகத்தை பொறுத்த வரையில் சிறிலங்கா சுதந்திர தினம் கரிநாளாக கடைபிடிக்கப்படவுள்ளது.



சிறிலங்காவின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து, மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.



இதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி போராட்டத்திற்கான முன்னாயத்த பணிகள் இடம்பெற்று வருகின்றன.



இந்நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில், மத தலைவர்கள், புதுக்குடியிருப்பு சமூக செயற்பாட்டாளர் விஜி, முன்னாள் விவசாய அமைச்சர் பவன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஈஸ்வரி, புதுக்குடியிருப்பு உபதவிசாளர் ஜனகமேனன் ஆகியோரை சந்தித்து குறித்த போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.



அதேபோல் நேற்றைய தினம், யாழ் .மறை மாவட்ட குரு முதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்து பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதன்படி எதிர்வரும் சுதந்திர தினத்தில் தமிழர் தாயகத்தில் பாரிய எழுச்சி போராட்டம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



இதேவேளை வழமைக்கு மாறாக இந்த முறை தென்னிலங்கையிலும் சுதந்திர தினத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  


மீண்டும் எழுச்சி கொள்ள தயாராகும் தமிழர் தாயகம் - பல்கலை மாணவர்கள் முல்லையில் ஒன்றுகூடல் சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து, போராட்டம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். தமிழர் தாயகத்தை பொறுத்த வரையில் சிறிலங்கா சுதந்திர தினம் கரிநாளாக கடைபிடிக்கப்படவுள்ளது.சிறிலங்காவின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து, மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.இதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி போராட்டத்திற்கான முன்னாயத்த பணிகள் இடம்பெற்று வருகின்றன.இந்நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில், மத தலைவர்கள், புதுக்குடியிருப்பு சமூக செயற்பாட்டாளர் விஜி, முன்னாள் விவசாய அமைச்சர் பவன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஈஸ்வரி, புதுக்குடியிருப்பு உபதவிசாளர் ஜனகமேனன் ஆகியோரை சந்தித்து குறித்த போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.அதேபோல் நேற்றைய தினம், யாழ் .மறை மாவட்ட குரு முதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்து பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன்படி எதிர்வரும் சுதந்திர தினத்தில் தமிழர் தாயகத்தில் பாரிய எழுச்சி போராட்டம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை வழமைக்கு மாறாக இந்த முறை தென்னிலங்கையிலும் சுதந்திர தினத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

Advertisement

Advertisement

Advertisement