• Oct 01 2023

ஊடகவியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பில் விஷேட கலந்துரையாடல்! samugammedia

Tamil nila / May 31st 2023, 5:12 pm
image

Advertisement

தொலைக்காட்சி அலைவரிசைகள் தரப்படுத்தப்படும் முறைமை (Rating) சரியானதாக இல்லை என்றும் அது முறையற்ற விதத்திலும் பக்கச்சார்பான வகையிலும் இடம்பெறுவதாக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பல்பிட்ட தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தரப்படுத்தலைக் கணக்கிடுவதற்கு எழுமாறாகத் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 தொலைக்காட்சிகளில் பொருத்தப்பட்டுள்ள உபகரணம் மூலம் தரவுகளைப் பெறுவதாக அனூஷ பல்பிட்ட மேலும் தெரிவித்தார்.

இவற்றில் பிரதான ஊடக நிறுவனங்கள் அந்த தரப்படுத்தலைக் கணக்கிடும் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தி இந்த உபகரணம் பொருத்தப்பட்டுள்ள சுமார் 300 தொலைக்காட்சிகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனால் பெறப்படும் தரவுகள் சரியானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தனியார் ஊடகங்களை விட அரச ஊடகங்களுக்கு பொறுப்புக்கள் காணப்படுவதாகவும், அலைவரிசை தரப்படுத்தலில் முன்னோக்கி வரவேண்டும் என்ற நோக்கில் மாத்திரம் செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஊடகவியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், மிகவும் சுறுசுறுப்பாக செய்திகளை வழங்குவதில் பங்களிக்கும் ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கும் முறைமை ஒன்றைத் தயாரிப்பது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

ஊடகவியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பில் விஷேட கலந்துரையாடல் samugammedia தொலைக்காட்சி அலைவரிசைகள் தரப்படுத்தப்படும் முறைமை (Rating) சரியானதாக இல்லை என்றும் அது முறையற்ற விதத்திலும் பக்கச்சார்பான வகையிலும் இடம்பெறுவதாக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பல்பிட்ட தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.தரப்படுத்தலைக் கணக்கிடுவதற்கு எழுமாறாகத் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 தொலைக்காட்சிகளில் பொருத்தப்பட்டுள்ள உபகரணம் மூலம் தரவுகளைப் பெறுவதாக அனூஷ பல்பிட்ட மேலும் தெரிவித்தார்.இவற்றில் பிரதான ஊடக நிறுவனங்கள் அந்த தரப்படுத்தலைக் கணக்கிடும் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தி இந்த உபகரணம் பொருத்தப்பட்டுள்ள சுமார் 300 தொலைக்காட்சிகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனால் பெறப்படும் தரவுகள் சரியானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், தனியார் ஊடகங்களை விட அரச ஊடகங்களுக்கு பொறுப்புக்கள் காணப்படுவதாகவும், அலைவரிசை தரப்படுத்தலில் முன்னோக்கி வரவேண்டும் என்ற நோக்கில் மாத்திரம் செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.மேலும், ஊடகவியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், மிகவும் சுறுசுறுப்பாக செய்திகளை வழங்குவதில் பங்களிக்கும் ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கும் முறைமை ஒன்றைத் தயாரிப்பது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement