• Sep 29 2024

ஒருங்கிணைந்த சுற்றுலா வலயத்தை உருவாக்குவது தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவு இடையில் விஷேட கலந்துரையாடல்! samugammedia

Tamil nila / Nov 20th 2023, 8:43 am
image

Advertisement

ஒருங்கிணைந்த சுற்றுலா வலயத்தை உருவாக்குவது தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த திட்டம் தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவு நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற YPO Colombo Experience: Rediscover the Pearl மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதி Mohamed Muizzu வுடன் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போது இது குறித்து கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையை பிராந்திய பொருட்கள் பரிமாற்ற மையமாக மாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், விவசாயத்தை நவீனமயமாக்கல் மற்றும் காணி உரிமை சீர்திருத்த வேலைத்திட்டம் தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த சுற்றுலா வலயத்தை உருவாக்குவது தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவு இடையில் விஷேட கலந்துரையாடல் samugammedia ஒருங்கிணைந்த சுற்றுலா வலயத்தை உருவாக்குவது தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த திட்டம் தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவு நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற YPO Colombo Experience: Rediscover the Pearl மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.மாலைதீவின் புதிய ஜனாதிபதி Mohamed Muizzu வுடன் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போது இது குறித்து கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், இலங்கையை பிராந்திய பொருட்கள் பரிமாற்ற மையமாக மாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.மேலும், அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், விவசாயத்தை நவீனமயமாக்கல் மற்றும் காணி உரிமை சீர்திருத்த வேலைத்திட்டம் தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement