• Apr 25 2024

டுவிட்டரில் தற்கொலை தடுப்புக்கான சிறப்பு ஹேஷ்டேக் சேவை நீக்கம்!

Chithra / Dec 25th 2022, 2:17 pm
image

Advertisement

சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கைப்பற்றியது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன்பு கூறும்போது, டுவிட்டரில் கடந்த காலங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விவகாரம் பற்றி கவனம் கொள்ளப்படாமல் இருந்தது. 

ஆனால், இந்த விவகாரத்திற்கு தீர்வு காண நம்பர் ஒன் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் கூறினார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்புடைய ஆபாச காட்சிகள் மற்றும் வீடியோக்கள் பல்வேறு இன்டர்நெட் தளங்களில் வெளியாவது ஆழ்ந்த கவலை அளிக்க கூடிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

இதற்கு எதிராக பல தளங்கள் கடுமையாக போராடி வருகின்றன. இதற்காக அந்த தகவல்களை கண்டறிந்து, அவற்றை நீக்கும் விசயங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மஸ்க் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

டுவிட்டரை மஸ்க் வாங்குவதற்கு முன்பு வரை, இந்த விசயத்தில் பல ஆண்டுகளாக டுவிட்டர் ஆனது பெருமுயற்சி எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், டுவிட்டரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன், தற்கொலை தடுப்பு மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அம்சம் கொண்ட சேவை ஒன்றை டுவிட்டரானது நீக்கியுள்ளது. 

புதிய உரிமையாளரான மஸ்க்கின் உத்தரவின் பேரிலேயே இது செயல்படுத்தப்பட்டு உள்ளது என டுவிட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதன்படி #ThereIsHelp என்ற சேவை நீக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மனநலம், எச்.ஐ.வி., தடுப்பூசிகள், குழந்தை பாலியல் சுரண்டல், கொரோனா பெருந்தொற்று, பாலின அடிப்படையிலான வன்முறை, இயற்கை பேரிடர்கள் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களுடன் தொடர்புடைய சேவை அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர்களை தொடர்பு கொள்வதற்கான குறிப்பிட்ட தேடுதல்களை மேற்கொள்ள இந்த ஹேஷ்டேக் பயனளித்து வந்தது.

இந்த சேவை கடந்த 2 நாட்களாக டுவிட்டரில் இல்லாதது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விசயத்தில் நம்பர் ஒன் முக்கியத்துவம் என கூறி விட்டு, இந்த நடவடிக்கையை மஸ்க் எடுத்துள்ளார்.

ஆனால், அக்டோபரில் பொறுப்பேற்றது முதல், தீங்கிழைக்க கூடிய பதிவுகள், கருத்துகள் உள்ளிட்டவை அதிகளவில் குறைந்துள்ளன என மஸ்க் கூறினார். 

எனினும், இனவாதம் மற்றும் வெறுக்கத்தக்க டுவிட்டர் பதிவுகள் அதிகரித்து உள்ளன என ஆய்வாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கூறி வந்தன. இந்த முரண்பட்ட சூழலில், இந்த நீக்க நடவடிக்கை அமைந்து உள்ளது. இதற்கு டுவிட்டரோ அல்லது எலால் மஸ்க்கோ உடனடியாக பதில் எதுவும் அளிக்கவில்லை. 

இதுபற்றி டுவிட்டரின் பார்ட்னராக உள்ள தென்கிழக்கு ஆசியாவின் கருத்து சுதந்திரத்திற்கான நெட்வொர்க் அமைப்பின் மேலாண் இயக்குனர் தமர் ஜூனியார்டோ நேற்று கூறும்போது, சமூக சேவை அமைப்பின் முட்டாள்தன நடவடிக்கைகள் என குறிப்பிட்டதுடன், இதனால், டுவிட்டரை எங்களது அமைப்பு விட்டு விலக வேண்டியது நேரிடும் என்றும் கூறியுள்ளார். 

இந்த முடிவால், லட்சக்கணக்கான மக்கள் பெரும் இடரை எதிர்கொண்டு உள்ளனர் என மஸ்க்கின் முடிவை பற்றி அறிந்தவர்களில், ஆனால் பெயர் வெளியிட அச்சம் தெரிவித்த வட்டாரம் தெரிவிக்கின்றது.

டுவிட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்ரவதை, தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. 

வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை டுவிட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதலை இக்குழு வழங்கி வந்தது. இந்த நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், ஆபத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்க கூடிய டுவிட்டரின் சிறப்பு ஹேஷ்டேக் சேவையை தற்போது எலான் மஸ்க் உத்தரவின்பேரில் அந்நிறுவனம் நீக்கியுள்ளது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு உள்ளது. ஒருவேளை அந்த சிறப்பு சேவையை திறம்பட அமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என கருதினாலும் அதற்கான தகவலும் வெளியிடப்படாமல் உள்ளது.


டுவிட்டரில் தற்கொலை தடுப்புக்கான சிறப்பு ஹேஷ்டேக் சேவை நீக்கம் சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கைப்பற்றியது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன்பு கூறும்போது, டுவிட்டரில் கடந்த காலங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விவகாரம் பற்றி கவனம் கொள்ளப்படாமல் இருந்தது. ஆனால், இந்த விவகாரத்திற்கு தீர்வு காண நம்பர் ஒன் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் கூறினார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்புடைய ஆபாச காட்சிகள் மற்றும் வீடியோக்கள் பல்வேறு இன்டர்நெட் தளங்களில் வெளியாவது ஆழ்ந்த கவலை அளிக்க கூடிய பிரச்சனையாக இருந்து வருகிறது.இதற்கு எதிராக பல தளங்கள் கடுமையாக போராடி வருகின்றன. இதற்காக அந்த தகவல்களை கண்டறிந்து, அவற்றை நீக்கும் விசயங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மஸ்க் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.டுவிட்டரை மஸ்க் வாங்குவதற்கு முன்பு வரை, இந்த விசயத்தில் பல ஆண்டுகளாக டுவிட்டர் ஆனது பெருமுயற்சி எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டது.இந்த நிலையில், டுவிட்டரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன், தற்கொலை தடுப்பு மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அம்சம் கொண்ட சேவை ஒன்றை டுவிட்டரானது நீக்கியுள்ளது. புதிய உரிமையாளரான மஸ்க்கின் உத்தரவின் பேரிலேயே இது செயல்படுத்தப்பட்டு உள்ளது என டுவிட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி #ThereIsHelp என்ற சேவை நீக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மனநலம், எச்.ஐ.வி., தடுப்பூசிகள், குழந்தை பாலியல் சுரண்டல், கொரோனா பெருந்தொற்று, பாலின அடிப்படையிலான வன்முறை, இயற்கை பேரிடர்கள் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களுடன் தொடர்புடைய சேவை அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர்களை தொடர்பு கொள்வதற்கான குறிப்பிட்ட தேடுதல்களை மேற்கொள்ள இந்த ஹேஷ்டேக் பயனளித்து வந்தது.இந்த சேவை கடந்த 2 நாட்களாக டுவிட்டரில் இல்லாதது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விசயத்தில் நம்பர் ஒன் முக்கியத்துவம் என கூறி விட்டு, இந்த நடவடிக்கையை மஸ்க் எடுத்துள்ளார்.ஆனால், அக்டோபரில் பொறுப்பேற்றது முதல், தீங்கிழைக்க கூடிய பதிவுகள், கருத்துகள் உள்ளிட்டவை அதிகளவில் குறைந்துள்ளன என மஸ்க் கூறினார். எனினும், இனவாதம் மற்றும் வெறுக்கத்தக்க டுவிட்டர் பதிவுகள் அதிகரித்து உள்ளன என ஆய்வாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கூறி வந்தன. இந்த முரண்பட்ட சூழலில், இந்த நீக்க நடவடிக்கை அமைந்து உள்ளது. இதற்கு டுவிட்டரோ அல்லது எலால் மஸ்க்கோ உடனடியாக பதில் எதுவும் அளிக்கவில்லை. இதுபற்றி டுவிட்டரின் பார்ட்னராக உள்ள தென்கிழக்கு ஆசியாவின் கருத்து சுதந்திரத்திற்கான நெட்வொர்க் அமைப்பின் மேலாண் இயக்குனர் தமர் ஜூனியார்டோ நேற்று கூறும்போது, சமூக சேவை அமைப்பின் முட்டாள்தன நடவடிக்கைகள் என குறிப்பிட்டதுடன், இதனால், டுவிட்டரை எங்களது அமைப்பு விட்டு விலக வேண்டியது நேரிடும் என்றும் கூறியுள்ளார். இந்த முடிவால், லட்சக்கணக்கான மக்கள் பெரும் இடரை எதிர்கொண்டு உள்ளனர் என மஸ்க்கின் முடிவை பற்றி அறிந்தவர்களில், ஆனால் பெயர் வெளியிட அச்சம் தெரிவித்த வட்டாரம் தெரிவிக்கின்றது.டுவிட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்ரவதை, தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை டுவிட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதலை இக்குழு வழங்கி வந்தது. இந்த நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், ஆபத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்க கூடிய டுவிட்டரின் சிறப்பு ஹேஷ்டேக் சேவையை தற்போது எலான் மஸ்க் உத்தரவின்பேரில் அந்நிறுவனம் நீக்கியுள்ளது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு உள்ளது. ஒருவேளை அந்த சிறப்பு சேவையை திறம்பட அமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என கருதினாலும் அதற்கான தகவலும் வெளியிடப்படாமல் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement