Tuesday, June 28, 2022

அமெரிக்க கிரீன் காட் விண்ணப்பங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

அமெரிக்காவில் கிரீன் காட் கோரி விண்ணப்பித்தோருக்கு ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்யக் கோரும் திட்டத்தை அமுலுக்கு கொண்டு வர அதிபர் ஆலோசனை கமிஷன் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிய அமெரிக்கர்கள்,ஹூவாய் பூர்வீகம் கொண்டவர்கள் மற்றும் பசிபிக் தீவு பூர்வீகத்தினர் எளிமையாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற வழிவகை செய்யும் வகையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் சட்டமாக்கப்பட்டால் நீண்ட காலமாக அமெரிக்க நிரந்தர குடியுரிமை கோரி காத்திருப்போருக்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இந்த திட்டத்திற்கு 25 கமிஷனர்களும் உடனடியாக ஒப்புதல் அளித்தனர். மேலும் கமிஷன் சார்பில் இந்த திட்டத்தை செயல்படுத்தி கிரீன் காட் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, விரைந்து முடிவு எடுக்க அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் பிரிவுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது.

கிரீன் காட் விண்ணப்பத்தின் பரிசீலனை சார்ந்த அனைத்து வழிமுறைகள், DACA புதுப்பித்தல்கள் மற்றும் இதர கிரீன் காட் விண்ணப்பங்களை ஆறு மாதங்களுக்குள் விசாரணை செய்து, விண்ணப்பித்த ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பத்திற்கான சட்டப்பூர்வ முடிவுகளை வெளியிடவும் கமிஷன் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை