சுற்றுலா வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க விசேட வேலைத்திட்டம்

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் பயணிப்பதில் எவ்வித அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தில் விசேட எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அண்மையில் தீர்மானித்துள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை