• Sep 30 2024

குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளைப் பாதுகாக்க இலங்கையில் புதிய சட்டம்! SamugamMedia

Chithra / Mar 1st 2023, 1:22 pm
image

Advertisement

ஒரு குற்றத்தின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவுவதற்கும் பாதுகாப்பதற்கும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவுவதற்கும், பாதுகாப்பதற்குமான சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த தரநிலைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில், முறையான ஏற்பாடுகளுடன் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த 08.03.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது அமுலில் உள்ளது. 


எனவே, சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த தீர்மானத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளைப் பாதுகாக்க இலங்கையில் புதிய சட்டம் SamugamMedia ஒரு குற்றத்தின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவுவதற்கும் பாதுகாப்பதற்கும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவுவதற்கும், பாதுகாப்பதற்குமான சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த தரநிலைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில், முறையான ஏற்பாடுகளுடன் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த 08.03.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது அமுலில் உள்ளது. எனவே, சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த தீர்மானத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement