உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை பதிவு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் உலகிலேயே அதிக வருடாந்த பணவீக்க வீதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே, ஹென்கே, பணவீக்க குறியீட்டை புதுப்பிக்கும் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின்படி, சிம்பாப்வே மட்டுமே இலங்கையை விட அதிக பணவீக்கத்தைக் காட்டும் நாடாக உள்ளது. இலங்கைக்கு அடுத்தபடியாக துருக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே கண்காணித்து வருகிறார்.

இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 130 வீதத்திற்கு மேல் செல்லும் என முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை