கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இன்று நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில்இலங்கை அணி சார்பில் ஷரித் அசலங்க 110 ஓட்டங்களையும்தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் அதி கூடிய ஓட்டங்களாக பெற்றனர்.
அதேவேளை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி தழுவியது.
இதன்படி ஐந்து போட்டிகளை கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரில் மூன்று தொடர் வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!(படங்கள் இணைப்பு
- கை ,கால்களை அடித்து முறிக்கும் இராணுவம் – சபையில் சிறீதரன் எம்.பி சீற்றம்!(வீடியோ இணைப்பு)
- தடைகளை தகர்த்து பாராளுமன்றிற்குள் நுழையும் தம்பிக்க!
- எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதாள உலகக் குழுக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
- பகிஷ்கரிப்பில் இறங்கிய ஆசிரியர்களால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka