• Mar 29 2024

ஆட்கடத்தல் கும்பலிடமிருந்து 90 பெண்களைக் காப்பாற்றிய இலங்கை அரசு

harsha / Dec 19th 2022, 5:13 pm
image

Advertisement

ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக டுபாய் மற்றும் ஓமான் நோக்கி பயணித்திருந்த விசாரணை குழு நாடு திரும்பியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 02 அதிகாரிகளும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை சேர்ந்த 04 அதிகாரிகளும் கடந்த 10ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தனர்.

இதேவேளை, சுற்றுலா விசா மற்றும் பணியகத்தில் பதிவு செய்து பணியாளர்களாக சென்று பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளான 30 பெண்கள் ஓமான் பாதுகாப்பு இல்லத்திலும் சுமார் 60 பேர் டுபாய் பாதுகாப்பு இல்லத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்தார்.

ஆட்கடத்தல் கும்பலிடமிருந்து 90 பெண்களைக் காப்பாற்றிய இலங்கை அரசு ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக டுபாய் மற்றும் ஓமான் நோக்கி பயணித்திருந்த விசாரணை குழு நாடு திரும்பியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 02 அதிகாரிகளும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை சேர்ந்த 04 அதிகாரிகளும் கடந்த 10ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தனர்.இதேவேளை, சுற்றுலா விசா மற்றும் பணியகத்தில் பதிவு செய்து பணியாளர்களாக சென்று பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளான 30 பெண்கள் ஓமான் பாதுகாப்பு இல்லத்திலும் சுமார் 60 பேர் டுபாய் பாதுகாப்பு இல்லத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement