• Apr 20 2024

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்து! சுகாதார, கல்வி அமைச்சுக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை! SamugamMedia

Chithra / Mar 19th 2023, 8:26 pm
image

Advertisement

நிலவும் அதிக வெப்பநிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார மற்றும் கல்வி ஆகிய அமைச்சுக்கள் வெளியிட்டுள்ளன.

அதிக வெப்பநிலையுடனான காலநிலையை எதிர்கொள்ளும் போது, வியர்வை மற்றும் உமிழ்நீரை வெளியேற்றுவதால், தசைப்பிடிப்பு, அதிக சோர்வு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி, அதிக வெப்பநிலையுடனான நாட்களில் பாடசாலை மாணவர்கள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும், இடைவேளை நேரங்களில், மாணவர்கள் அதிக வெப்பக் காலநிலையில், வெளி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக குடிநீரை அருந்தவும், அதிக சோர்வு நிலையை போக்க இரண்டு சிறு ஓய்வு காலங்களை, வழங்குவது சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


அதிக வெப்பநிலையுடனான நாட்களில், இல்ல விளையாட்டு போட்டிக்களை நடத்துவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்து சுகாதார, கல்வி அமைச்சுக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை SamugamMedia நிலவும் அதிக வெப்பநிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார மற்றும் கல்வி ஆகிய அமைச்சுக்கள் வெளியிட்டுள்ளன.அதிக வெப்பநிலையுடனான காலநிலையை எதிர்கொள்ளும் போது, வியர்வை மற்றும் உமிழ்நீரை வெளியேற்றுவதால், தசைப்பிடிப்பு, அதிக சோர்வு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, அதிக வெப்பநிலையுடனான நாட்களில் பாடசாலை மாணவர்கள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும், இடைவேளை நேரங்களில், மாணவர்கள் அதிக வெப்பக் காலநிலையில், வெளி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளது.அத்துடன், அதிக குடிநீரை அருந்தவும், அதிக சோர்வு நிலையை போக்க இரண்டு சிறு ஓய்வு காலங்களை, வழங்குவது சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதிக வெப்பநிலையுடனான நாட்களில், இல்ல விளையாட்டு போட்டிக்களை நடத்துவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement