இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது தொடர் நேற்று ஆரம்பமான நிலையில்,முதல் போட்டியிலேயே இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் ,நேற்று இரவு 7 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.அந்த வகையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பு இன்றி வெற்றி இலக்கை கடந்தது.
அவுஸ்ரேலியா அணி சார்பாக டேவிட் வோர்னர் 70 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஆரோன் பின்ச் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
மாயமான முல்லைத்தீவு சிறுமி ஹட்டனில் கண்டுபிடிப்பு!
கொழும்பு- யாழ் அதிவேக புகையிரத சேவை;பந்துல நடவடிக்கை!
இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரம்;மேலும் 4 பேர் போராட்டத்தில் இணைவு!
உக்ரைனின் அதிரடித் தாக்குதலால் உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்த ரஷ்யா!
யாழ்ப்பாண கள்ளுக்கு ஏற்பட்ட மவுசு!
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்