• Apr 18 2024

இலங்கைப் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்! - பெண் வேட்பாளர்கள் அழைப்பு

Chithra / Jan 29th 2023, 3:14 pm
image

Advertisement

இம்முறை தேர்தலில் பெண்களுக்காக 25% ஒதுக்கீடு காணப்படுகின்றது. பெண்களுக்கான பிரச்சினையை பெண்களே எதிர்கொள்ள இலகுவாகக் காணப்படுவதனால் கட்சிபேதங்களைக் கடந்து பெண்கள் பெண் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும் என பெண் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று கபே அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி பெண் வேட்பாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கி குறித்த கருத்தரங்கு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது, பங்குபற்றிய வெவ்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களிற்கு ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

அதில் கலந்துகொண்டு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

ஒரு கிராமத்திற்குள் காணப்படும் பெண்கள் தொடர்பான பிரச்சினை, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சார் பிரச்சினை மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகக் கையாண்டு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். 

ஒட்டுமொத்த இலங்கையில் 52% ஆன  பெண்கள் காணப்படும் வேளை அரச துறையாயினும் சரி தனியார் துறையாயினும் பெண்களின் வகிபாகமானது மிக அதிகமாகவே காணப்படுகின்றது. மாறாக அரசியலில் மட்டுமே 25% பெண்களின் வகிபாகம் காணப்படுகின்றது. 

சமூக வளைத்தள விமர்சனங்கள் மற்றும் ஏனைய தடைகளை தகர்த்து கூடுதலான பெண்கள் தாமாகவே அரசியல் களத்திற்கு உள் வர வேண்டும். 

பெரும்பாலும் கட்சிகளில் உரிய இடங்கள் கிடைக்கப்பெறாமையால் சுயேட்சைகளாக தேர்தலில் பலர் களமிறங்கியுள்ளனர். ஆகவே எதிர்காலத்தில் பெண்களுக்கென தனியான கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது.  

எமது கருத்துக்கள் மற்றும் பிரச்சினைகளை வெளிக்கொணர முயற்சித்தாலும் நேரடியான எதிர்ப்புக்கள் இல்லாவிடினும் மறைமுகமாக பல்வேறு எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன. 

அவை அனைத்தையும  எதிர்த்து எமது கிராமத்திற்காக எமது வட்டாரங்களுக்காக அபிவிருத்திக்காக முன்வரவேண்டிய தேவை உள்ளது. 

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வீட்டிலும் சரி நாட்டிலும் சரி பெரும் பங்களிப்பைப் பெண்கள் தொடர்ந்த வண்ணமுள்ளனர். ஆகவே இதனை மேலும் வலுப்படுத்த பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்.- என்றார்


இலங்கைப் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் - பெண் வேட்பாளர்கள் அழைப்பு இம்முறை தேர்தலில் பெண்களுக்காக 25% ஒதுக்கீடு காணப்படுகின்றது. பெண்களுக்கான பிரச்சினையை பெண்களே எதிர்கொள்ள இலகுவாகக் காணப்படுவதனால் கட்சிபேதங்களைக் கடந்து பெண்கள் பெண் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும் என பெண் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேர்தல்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று கபே அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி பெண் வேட்பாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கி குறித்த கருத்தரங்கு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.இதன் போது, பங்குபற்றிய வெவ்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களிற்கு ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.அதில் கலந்துகொண்டு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ஒரு கிராமத்திற்குள் காணப்படும் பெண்கள் தொடர்பான பிரச்சினை, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சார் பிரச்சினை மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகக் கையாண்டு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். ஒட்டுமொத்த இலங்கையில் 52% ஆன  பெண்கள் காணப்படும் வேளை அரச துறையாயினும் சரி தனியார் துறையாயினும் பெண்களின் வகிபாகமானது மிக அதிகமாகவே காணப்படுகின்றது. மாறாக அரசியலில் மட்டுமே 25% பெண்களின் வகிபாகம் காணப்படுகின்றது. சமூக வளைத்தள விமர்சனங்கள் மற்றும் ஏனைய தடைகளை தகர்த்து கூடுதலான பெண்கள் தாமாகவே அரசியல் களத்திற்கு உள் வர வேண்டும். பெரும்பாலும் கட்சிகளில் உரிய இடங்கள் கிடைக்கப்பெறாமையால் சுயேட்சைகளாக தேர்தலில் பலர் களமிறங்கியுள்ளனர். ஆகவே எதிர்காலத்தில் பெண்களுக்கென தனியான கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது.  எமது கருத்துக்கள் மற்றும் பிரச்சினைகளை வெளிக்கொணர முயற்சித்தாலும் நேரடியான எதிர்ப்புக்கள் இல்லாவிடினும் மறைமுகமாக பல்வேறு எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தையும  எதிர்த்து எமது கிராமத்திற்காக எமது வட்டாரங்களுக்காக அபிவிருத்திக்காக முன்வரவேண்டிய தேவை உள்ளது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வீட்டிலும் சரி நாட்டிலும் சரி பெரும் பங்களிப்பைப் பெண்கள் தொடர்ந்த வண்ணமுள்ளனர். ஆகவே இதனை மேலும் வலுப்படுத்த பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்.- என்றார்

Advertisement

Advertisement

Advertisement