• Apr 18 2024

இலங்கையின் பணவீக்கம் ஜனவரியில் வீழ்ச்சி!

Tamil nila / Feb 3rd 2023, 9:26 pm
image

Advertisement

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஆண்டு டிசம்பரில் 57.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம் இவ்வாண்டு ஜனவரி மாதம் 54.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.


அதன்படி கடந்த டிசம்பரில் 64.4 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஜனவரியில் 60.1 சதவீதமாகவும், டிசம்பர் மாதம் 53.4 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் ஜனவரி மாதம் 51 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.



மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த ஜனவரி மாதம் 0.43 சதவீதமாகக் காணப்படுவதுடன் இதற்கு உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளில் முறையே 0.23 சதவீதமாகவும், 0.20 சதவீதமாகவும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

இலங்கையின் பணவீக்கம் ஜனவரியில் வீழ்ச்சி கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஆண்டு டிசம்பரில் 57.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம் இவ்வாண்டு ஜனவரி மாதம் 54.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படி கடந்த டிசம்பரில் 64.4 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஜனவரியில் 60.1 சதவீதமாகவும், டிசம்பர் மாதம் 53.4 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் ஜனவரி மாதம் 51 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த ஜனவரி மாதம் 0.43 சதவீதமாகக் காணப்படுவதுடன் இதற்கு உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளில் முறையே 0.23 சதவீதமாகவும், 0.20 சதவீதமாகவும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

Advertisement

Advertisement

Advertisement