• Apr 23 2024

ரின் மீன் உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு – இறக்குமதி அவசியமில்லை!

Chithra / Jan 30th 2023, 6:09 pm
image

Advertisement

ரின் மீன் உற்பத்தியில் இலங்கை தன்னிறைவுடைந்துள்ளதாக டெஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ரின் மீன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவருமான சிரான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குத் தேவையான ரின் மீன்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முதன் முறையாக ரின் மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் நாளாந்த ரின் மீன்களின் தேவை சுமார் இரண்டரை இலட்சம் எனவும், ஆனால் தற்போது உள்ளூர் தொழிற்சாலைகள் நாளொன்றுக்கு மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மீன் ரின்களை உற்பத்தி செய்வதாகவும் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எதிர்காலத்தில் ரின் மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரின் மீன் உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு – இறக்குமதி அவசியமில்லை ரின் மீன் உற்பத்தியில் இலங்கை தன்னிறைவுடைந்துள்ளதாக டெஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ரின் மீன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவருமான சிரான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.நாட்டுக்குத் தேவையான ரின் மீன்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை முதன் முறையாக ரின் மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.இலங்கையின் நாளாந்த ரின் மீன்களின் தேவை சுமார் இரண்டரை இலட்சம் எனவும், ஆனால் தற்போது உள்ளூர் தொழிற்சாலைகள் நாளொன்றுக்கு மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மீன் ரின்களை உற்பத்தி செய்வதாகவும் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே எதிர்காலத்தில் ரின் மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement