சிறுமியின் உடலில் பேய்? கணப்பொழுதில் நிகழ்ந்த பயங்கரம்!

228

இலங்கையின் தெற்கே மீஹாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டுபொட பகுதியில் மாந்திரீகம் செய்யப்பட்ட ஒன்பது வயதான சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் உடலில் ஆவியின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், அதனால் அவரை ஆவியிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்பதற்காகவும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த மாந்திரிகம் செய்துவரும் பெண்ணொருவரே இந்த பூசைகளை மேற்கொண்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் குறித்த சிறுமியை பூசைகளுக்கு அனுமதித்ததுடன் அவருக்கு ஒருவகை எண்ணை பூசப்பட்டுள்ளதுடன் கரும்பால் பலமுறை அடிக்கப்பட்டுளது. இந்த வலியைத் தாங்கமுடியாத சிறுமி அலறியடித்து துடிதுடித்து மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து நீண்ட நேரமாக எழுந்திராததால் சந்தேகமுற்று அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த மீஹாவத்தை பொலிஸார் குறித்த பெண் மத்திரவாதியை கைது செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: