• Apr 24 2024

தமிழர் பகுதியில் புத்தர் சிலை பிரதிஸ்டை..! தொடரும் போராட்டம் - களத்திற்கு வந்த அரச அதிபர்! samugammedia

Chithra / May 13th 2023, 1:12 pm
image

Advertisement

திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடன் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவுள்ளது.

குறித்த பெளத்த ஆக்கிரபிப்பினை எதிர்க்கும் முகமாக இன்றையதினம் காலை முதல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பங்குகொண்டிருந்த குறித்த போராட்டத்தில், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

"தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட பெளத்த ஆக்கிரமிப்பினை இந்த அரசானது உடன் நிறுத்த வேண்டும், தமிழர்களது பூர்வீக நிலங்கள் தொடர்ச்சியான பெளத்தமயமாக்கப்படும் நிலைமைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும்." என குறிப்பிட்டு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த போது அவ்விடத்திற்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட அரச அதிபர், திட்டமிட்ட படி நடைபெற இருக்கும் தாய்லாந்து பெளத்த பிக்குகளது நிகழ்வில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், துறவிகள் எவரும் குறித்த தொல்பொருள் இடத்தினுள் செல்லப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு மாற்றீடாக வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆர்ப்பாட்டம் செய்வது எமது உரிமை அதற்கு யாரும் தடை போட வேண்டாம்.

இவ்வாறு பல சம்பவங்கள் நிகழ்ந்திருகின்ற போதிலும், அது தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையாகவே மாறியுள்ளதாக தெரிவித்து குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


தமிழர் பகுதியில் புத்தர் சிலை பிரதிஸ்டை. தொடரும் போராட்டம் - களத்திற்கு வந்த அரச அதிபர் samugammedia திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடன் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவுள்ளது.குறித்த பெளத்த ஆக்கிரபிப்பினை எதிர்க்கும் முகமாக இன்றையதினம் காலை முதல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பங்குகொண்டிருந்த குறித்த போராட்டத்தில், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்."தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட பெளத்த ஆக்கிரமிப்பினை இந்த அரசானது உடன் நிறுத்த வேண்டும், தமிழர்களது பூர்வீக நிலங்கள் தொடர்ச்சியான பெளத்தமயமாக்கப்படும் நிலைமைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும்." என குறிப்பிட்டு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த போது அவ்விடத்திற்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட அரச அதிபர், திட்டமிட்ட படி நடைபெற இருக்கும் தாய்லாந்து பெளத்த பிக்குகளது நிகழ்வில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், துறவிகள் எவரும் குறித்த தொல்பொருள் இடத்தினுள் செல்லப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.அதற்கு மாற்றீடாக வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.ஆர்ப்பாட்டம் செய்வது எமது உரிமை அதற்கு யாரும் தடை போட வேண்டாம்.இவ்வாறு பல சம்பவங்கள் நிகழ்ந்திருகின்ற போதிலும், அது தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையாகவே மாறியுள்ளதாக தெரிவித்து குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement