இலங்கையின் பணவீக்கத்தை துல்லியமான அளவிட்டுள்ள பொருளாதார நிபுணர் ஸ்டீவ்!

தனது துல்லியமான அளவீட்டின்படி, இலங்கையின் பணவீக்கம் 130.14 சதவீதமாக உள்ளது என்று பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பணவீக்கம் அதிகாரப்பூர்வமான 39.10 சதவீதத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் பால்டிமோர், மேரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் என்ற தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான பேராசிரியர் ஹான்கே, நாணய பிரச்சனை உள்ள நாடுகளில் பணவீக்கத்தை அளவிடுகிறார்.

ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது ஒருவர் அனுபவிக்க வேண்டிய வாய்ப்பு செலவு மற்றும் பிற தொடர்புடைய செலவுகள் போன்ற உண்மையான அடிப்படை காரணிகளை பேராசிரியர் ஹான்கே கணக்கில் எடுத்துக்கொள்கிறார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை