ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதங்களில் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் படங்கள் இந்த மாதம் வெளியாகி வருகின்றன.
கடந்த வெள்ளியன்று வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ், ஜீவாவின் வரலாறு முக்கியம், விஜயானந்த், குருமூர்த்தி, உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
இதேபோன்று ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான பாபா படம் மீண்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் பாபா படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக புயலின் தாக்கம் இருந்த காரணத்தால், பெரும்பாலான ரசிகர்கள் தியேட்டர் பக்கம் வருவதை தவிர்த்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் பெருவாரியான மாவட்டங்களில் மாண்டஸ் புயல் பாதிப்பு திரைப்படங்களையும் கடுமையாக தாக்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தபோதிலும் தியேட்டர்களில் சினிமா ரசிகர்களின் வருகை மிகக் குறைவாகவே உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
போதாக்குறைக்கு குளிரும் வெளுத்து வாங்குவதால் பொது மக்கள் பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
அடுத்தடுத்த நாட்களில் வெயில் வந்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடக்கூடிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் கடந்து விட்டதால் கடந்த வெள்ளியன்று ரிலீஸான படங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
அடுத்த வாரத்தில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதாலும், அந்த படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதாலும், இந்த வார ரிலீஸ்கள் பின்னடைவை சந்திக்கும் என்றே கூறப்படுகிறது.
இது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது மாண்டஸ் புயல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதங்களில் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் படங்கள் இந்த மாதம் வெளியாகி வருகின்றன.கடந்த வெள்ளியன்று வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ், ஜீவாவின் வரலாறு முக்கியம், விஜயானந்த், குருமூர்த்தி, உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதேபோன்று ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான பாபா படம் மீண்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது.அந்த வகையில் பாபா படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக புயலின் தாக்கம் இருந்த காரணத்தால், பெரும்பாலான ரசிகர்கள் தியேட்டர் பக்கம் வருவதை தவிர்த்து இருக்கிறார்கள்.தமிழ்நாட்டின் பெருவாரியான மாவட்டங்களில் மாண்டஸ் புயல் பாதிப்பு திரைப்படங்களையும் கடுமையாக தாக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தபோதிலும் தியேட்டர்களில் சினிமா ரசிகர்களின் வருகை மிகக் குறைவாகவே உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. போதாக்குறைக்கு குளிரும் வெளுத்து வாங்குவதால் பொது மக்கள் பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.அடுத்தடுத்த நாட்களில் வெயில் வந்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடக்கூடிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் கடந்து விட்டதால் கடந்த வெள்ளியன்று ரிலீஸான படங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அடுத்த வாரத்தில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதாலும், அந்த படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதாலும், இந்த வார ரிலீஸ்கள் பின்னடைவை சந்திக்கும் என்றே கூறப்படுகிறது.இது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.