தமிழரை சிதைக்க வந்த நாகபாம்புகள்!

105

தமிழ் மொழி, தொல்லியல் ஆய்வுகளில் இரண்டு பேர் சிறந்த ஆய்வாளர்கள் என்று அறியப்படுகின்றனர். ஒருவர் மறைந்த ஐராவதம் மகாதேவன் மற்றொருவர் இன்றும் வாழும் திரு.நாகசாமி.

நம்மைப் போல அல்ல, நேரடியாக இவர்கள் களம் கண்டு ஆய்ந்த போது இவர்களுக்கு முழுமையாகத் தெரிந்து போன உண்மைகள்,

“தமிழ்” மூத்த மொழி, சமஸ்கிருதம், தெலுங்கு என்பதெல்லாம் பிற்கால மொழிகள். தமிழ், தமிழர்களின் வரலாறு, இலக்கியங்கள் சொல்வதைவிட மிகவும் முற்பட்டவை.

தமிழ், தமிழர் நாகரிகம் “தென்குமரி முதல் வடவேங்கடம் (இமயமலை) வரை இருந்துள்ளது, சிந்து வெளி, சுமேரிய நாகரிகங்களும் தமிழர் நாகரிகங்களே”

என்று.

நன்றாகக் கவனியுங்கள், ஐராவதம் மகாதேவனுக்கு ஒரு அதிர்ச்சி, “இது தமிழ், தமிழர் நாகரிகம் என்று சொல்லிவிட்டால், தமது தாய்மொழியான தெலுங்கு பின்தங்கிவிடும், பிறகு தமிழ், தமிழர்கள் வரலாற்றில் முதன்மை பெற்று விடுவார்கள்” என்ற எண்ணம் மேலோங்க, சிந்துவெளி நாகரிகம் “திராவிட நாகரிகம்” அதாவது தெலுங்கு, கன்னடம் முதன்மையாகவும் தமிழ், மலையாளம் இரண்டாவதாகவும் உள்ள தென்னிந்திய திராவிட நாகரிகம் எனப் பொத்தாம் பொதுவாகக் கூட்டாஞ்சோறு ஆக்கி சட்டியை மூடி வைத்துவிடுகிறார்.

இவர் கூறியதையே, பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், அமர்நாத் சு.வெங்கடேசன், சுபாஷினி வகையறாக்கள் தொடர்ந்து ஊடகங்கள், மேடைகளில் இன்றும் பதிய வைத்து வருவதைக் காணலாம்.

இந்த “சேர்ந்திசை”யின் பாடலாசிரியர், இசை இயக்குநர் மறைந்த ஐராவதம் மகாதேவன்.

ஆனால், இது சுத்த அயோக்கியத் தனம், “சிந்து வெளியில் உள்ளவையும், தெற்கில் கீழடி உட்பட பல இடங்களில் இன்றும் கிடைக்கப்பெறும் எழுத்துகள் தமிழ்தான் என்று அடித்து ஆதாரங்களுடன் கூறுகிறார் பேராசிரியர். மதிவாணன் ஐயா. (அரசு பாவாணர் ஆய்வுத் துறையில் பணியாற்றியவர்).

இன்றும், சிந்து வெளி எழுத்துகளை வாசிக்கும் ஒரே ஆய்வாளர் இவர்தான்.

ஆனால், ஐராவதம் மகாதேவன் கோஷ்டிகள், தங்கள் அரசியல், ஊடக செல்வாக்குகளையும், சொல்வாக்குகளையும் வைத்து, இந்தப் பேருண்மைகளை இருட்டடிப்பு செய்வதுடன், மடைமாற்றி விடுகின்றனர்.

ஒரு ஆறு மாதம், ஒரு ஆண்டு இடைவெளியில், மொழியில், தொல்லியல் துறை சாராத கம்ப்யூட்டர் சாஃட்வேர் பொறியாளர் எவராவது, சிந்து வெளி எழுத்துகள் proto dravidian அதாவது திராவிட மொழிகளின் மூல மொழி என்று ஒரு நூல் எழுதினால் அதைத் தூக்கிக் கொண்டு வந்து ஊடகங்களில் பிரபலப் படுத்துவார்கள்.

ஊடக ஜாம்பவான்களும், இவர் சாஃப்ட்வேர் துறையாச்சே, கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பெங்களூருவில் பணியாற்றிக் கொண்டு சிந்து வெளி எழுத்துகளைப் பற்றி ஆய்வு நூல் வெளியிடுகிறாரே, அதில் மதிவாணன் போன்றோர் நடத்திய ஆய்வுகளை மேற்கோள் காட்டியிருக்கிறாரா? தமிழ் தொன்மம் பற்றி என்ன பார்வையில் அணுகி இருக்கிறார் என்றெல்லாம் கேட்கமாட்டார்கள்.

பரிந்துரைப்பது முன்னாள் ஐஏஎஸ், எம்பி, தொல்லியல் துறை பிரபல அதிகாரிகளாயிற்றே.

இவர்களின் நோக்கம் ஐராவதம் மகாதேவன் வைத்த புள்ளிக் கோலம்தான்.

அதாவது,

“1. தமிழ் உட்பட திராவிட மொழிக்குடும்ப மொழிகள் வேறு ஒரு மொழியில் இருந்து கிளைத்தவை. அதனால் தமிழ் மூத்த மொழி அல்ல.

  1. சுமேரியா, சிந்து வௌியில் இருந்தே தெற்கு கீழடி நோக்கி நகர்ந்து வந்தது “திராவிட” நாகரிகம்.
  2. குமரிக் கண்டம் என்று ஒன்றோ, தமிழர்களின் நாகரிகம் தோன்று இடமோ தெற்கு இல்லை. வடக்கில் இருந்து வந்தது.
  3. அவ்வாறு நாகரிகத்தை இங்கே எடுத்து வந்தவர்கள் சௌராஷ்டிரிகள், தெலுங்கர்கள் உள்ளிட்டவர்களின் மூதாதையர்.
  4. தமிழ், தமிழர் மூத்தகுடி அல்ல”

என்பனவே இவர்கள் இடத் துடிக்கும் 5 புள்ளிக் கோலம்.

இதன் அடிப்படையிலேயே, கீழடியை இந்தக் குழு முதலில், ” திராவிட நாகரிகம்” என்று சேர்ந்திசைத்தது. கடும் எதிர்ப்பு வந்தவுடன் “வைகை நாகரிகம்” என்று இறங்கி வந்து, மேலும் எதிர்ப்பு வலுக்க, பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், “கீழடியை வேண்டுமானால் தமிழர் நாகரிகம் என்று சொல்லலாம், ஆனால் சிந்துவெளி, திராவிட நாகரிகம்” என்று விடாப்பிடியாகக் கதறுகிறார்.

இது திராவிடக் குழுவினரின் நுண்ணரசியல்.

அடுத்து, ஊஞ்சலூர்க்காரரான நாகசாமி. பெரிய ஆய்வாளர். அதிகாரியாகப் பணியாற்றியவர்.

ஈரோடு கொடுமணலில், புலவர் இராசு ஐயா கண்டுபிடித்த தொல்லியல் இடம் ஒன்றில் ஒரு குழி தோண்டி அதில் கிடைக்கப்பெற்ற தமிழர் நாகரிகத் தொல்லியல் பொருட்களைக் கண்டதும் ஐராவதம் மகாதேவன் பதறியதைப் போல, இதெல்லாம் முழுசாத் தோண்டி எடுத்தா, தமிழர் நாகரிகம் உலக அளவில் முதன்மையாகிவிடுமே என்று எண்ணி இரண்டாம், மூன்றாம் குழிகளை மூட வைத்து தோண்டும் பணிகளைக் கிடப்பில் போட்டவர் நாகசாமி. இவ்வாறு இவர் ஊத்தி மூடியது ஏராளம்.

சமஸ்கிருதத்தைத் தமிழுக்கு முந்தையது அல்லது ஈடானது என்று நிறுவத் துடிப்பவர்.

இவரைப் பற்றி அறிந்தவர்களே கூறுவது, இவர் ஒரு நாகப்பாம்பு என்று.

ஆக, ஒரு புறம் திராவிடம் மறுபுறம் பிராமணியம் என இருதரப்பும் திட்டமிட்டுத் தமிழைத் தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்து கொண்டு, மடைமாற்றி வருகின்றனர்.

தொல்லியல் பக்கம் உள்ளடி வேலைகளை யாரும் கண்டு கொண்டிருக்காத நிலையில் இருதரப்பும் “பிள்ளை இல்லாதவன் வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டது போல” ஆட்டம் போட்டிருக்கின்றனர்.

ஐராவதம் மகாதேவனும், நாகசாமியும் சூட்டிய பெயர்தான் “பிராமி”.

உண்மையில் இது “தமிழ் எழுத்துகள்” என்றே அழைக்கப்பட வேண்டும். காரணம் தமிழின் சிறப்பெழுத்துகளைக் கொண்டிருக்கின்றன. பிற “பிராமி” எழுத்துகளைவிட பல நூற்றாண்டுகள் முந்தையதாக இருக்கின்றன.