விந்தணு, தாய்ப்பாலில் நகைகள் செய்து அசத்தும் வெளிநாட்டு பெண்!

கனடாவை சேர்ந்த அமாண்டா என்ற பெண் விந்தணுக்கள், தாய்ப்பால் மற்றும் உயிரிழந்தவர்களின் சாம்பல்களை வைத்து நகைகள் செய்து அசத்தி வருகிறார்.

கனடாவை சேர்ந்தவர் அமாண்டா, சமீபத்தில் இவர் டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ வைரலானது.

தாய்ப்பால், விந்தணுக்களில் நகைகள் உருவாக்குவது தொடர்பான அந்த வீடியோக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதுமட்டுமல்லாது உயிரிழந்தவர்களின் சாம்பல், தலைமுடி, நச்சுக்கொடி, காய்ந்த பூக்கள் என பலவிதமான பொருட்களில் இருந்து நகைகளை தயாரித்து வருகிறாராம் அமாண்டா.

அமாண்டா பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட, நபர் ஒருவர் கொடுத்த ஐடியாவால் விந்தணுவில் உள்ள நகைகள் உருவாக்கும் எண்ணம் தோன்றியதாம்.

இதற்காக அவரது கணவரின் ஒரு டீஸ்பூன் விந்தணுவை எடுத்து பரிசோதித்து பார்த்துள்ளார், முதலில் powder-formக்கு மாற்றிய பின்னர் களிமண் சேர்த்து முத்துமணிகளாக மாற்றுவதாக தெரிவிக்கிறார்.

மனதுக்கு நெருக்கமானவர்கள் மீது வைத்துள்ள காதலை வெளிப்படுத்தும் நோக்கில் உள்ளதால் அமாண்டாவின் இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு அளிப்பதாகவும் நெகிழ்கிறார்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை