முழு இலங்கையை உலுக்கிய சம்பவமாக, அண்மையில் மட்டக்களப்பு பெரியகல்லாற்றில் உறவினர் வளர்ப்பில் இருந்த சிறுமி ஒருவர் பராமரிப்பில்லாமல் பட்டினிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

அக்குழந்தையின் மரணத்திற்கு நீதி கோரி, இன்று செவ்வாய்க்கிழமை பிரதேசத்திலுள்ள மக்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இப்படியான இரக்கமற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அக் குழந்தைக்கு நாம் அனைவரும் நீதி பெற்று கொடுக்க வேண்டும்.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அவர்கள் தண்டனை பெற வேண்டும். எனவே இப்பதிவை அதிகம் பகிருங்கள். குழந்தைக்கான நீதிக்காக போராடுவோம். அனைவரும் ஆதரவளியுங்கள் என சமூக ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடந்தது என்ன??

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 11வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பெரியகல்லாறு 02ஆம் குறிச்சி, நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம் கடந்த10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி சிறிய தாயின் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி அவரின் அம்மமாவின் வீட்டில் இருந்தபோது தாக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமி கிராம சேவகரினால் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்த சிறுமியை சிறுமியின் சிறிய தாயார் நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

இந்த நிலையிலேயே நேற்று காலை சிறிய தாயின் வீட்டில் இருந்து குறித்த சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேறு திருமணம் முடித்ததாகவும், அதனை சிறிய தாயார் போதை, களியாட்டம் என்று தவறாக பயன்படுத்தியதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: