சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு – திருமலையில் போராட்டம்

339

சிறுவர்கள்,பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அத்தனை வன்முறைகளுக்கு எதிராகவும், திருகோணமலையில் இன்று சனிக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், ரிசார் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமிக்காகவும் திருகோணமலை மக்கள் குரல் எழுப்பி இருந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னராக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகள் அதிகரித்து உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: