திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழ் கைதிகள் தமக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழ் கைதிகளின் போராட்டம் இன்றுடன் 38 நாட்களைக் கடந்து, சங்கிலித் தொடர் போராட்டத்தை முன்னெத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில் _

எமது போராட்டம் இன்றுடன் 38 ஆம் நாளை கடந்து செல்கிறது. ஆனால், எங்களுக்கான முடிவு மட்டும் மூடுமந்திரமாகவே இருக்கின்றது.

மேலும், இன்று எமது போராட்டம் சங்கிலித் தொடர் போராட்டமாகத் தொடர்கிறது.

இப் போராட்டத்தை ஊடக நண்பர்களும் மற்றும் அனைத்து தமிழ் உறவுகளும் எங்களுக்காக குரல் கொடுங்கள் என்றும் நாங்கள் ஏந்தியிருக்கும் பதாகைகளை அவதானித்தால் எம் நிலை புரியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், எங்கள் உண்மை நிலையை அறிந்து, எங்களுக்கான விடுதலையை வழங்குமாறும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: