கொவிட் மரணங்களை அறிக்கையிடும் முறையில் திடீர் மாற்றம்-வெளியானது அறிவிப்பு..!

171

இலங்கையில் இன்று முதல் கொவிட் மரணங்களை அறிவிக்கும் போதும் கடந்த 48 அல்லது 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற அனைத்து மரணங்களையும் அன்றைய தினத்திலேயே அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

மேலும் அதன்படி, இதற்கு முன்னர் அறிக்கை இடப்பட்ட கடந்த தினங்களின் கொரோனா வைரஸ் மரணங்களின் எண்ணிக்கை புதிய பொறிமுறையின் கீழ் அறிக்கை இடப்படாதென அவர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இதற்கு முன்னர் எம்மால் கடந்த தினங்களில் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை அறிக்கை இடப்பட்டது. எனினும் நாம் இன்று முதல் கடந்த 48 மணித்தியாலங்களில் பதிவான கொவிட் மரணங்கள் அனைத்தையும் அன்றைய தினத்திலேயே வௌியிட தீர்மானித்துள்ளோம்.

அதன்படி, நாள் ஒன்றில் ஏற்படும் அனைத்து கொவிட் மரணங்களையும் அன்றைய தினமே வௌியிட புதிய பொறிமுறை ஒன்றை தயாரித்துள்ளோம். இதற்கமைய கடந்த 48 மற்றும் 24 மணித்தியாலங்களினுள் இடம்பெறும் கொவிட் மரணங்களை அன்றைய தினத்திலேயே அறிக்கையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: