திடீரென கைது செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலம்-இது தான் காரணமா?

603

உலகலாவிய ரீதியல் அதிக மக்களை பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

தற்போது பிக்பாஸ் போட்டியாளர் பற்றி ஒரு பரபரப்பான செய் தி வெளியாகி உள்ளது.அதாவது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி.

மேலும் இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தினமும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் கடந்த மே மாதம் பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து, இவர் வெளியிட்ட காணொளி சமூகவலைதளத்தில் வைரலானது.

எனினும் இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. நடிகை யுவிகா சவுதிரி மீது பொலிசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நடிகை யுவிகா சவுத்ரியை அரியானா பொலிசார் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர்.

அத்தோடு கைது செய்யப்பட்டதை அடுத்து ஜாமீன் கோரி அவர், அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகை யுவிகா சவுத்ரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை யுவிகா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.