• Mar 29 2024

சுமந்திரன் மற்றும் சம்மந்தன் தமிழ் மக்களை மிதிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது! - தவராசா எச்சரிக்கை SamugamMedia

Chithra / Feb 22nd 2023, 11:26 am
image

Advertisement

சேனாதிராஜா போன்றோர் தமிழ் தேசியாதிக்கெதிராக செயற்படுவதாகவும், சம்மந்தன் மற்றும் சுமந்திரன் அரசியலை சேவை இன்றி தொழிலாக செய்து ஏமாற்றி வருவதாகவும் சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியாளர்கள்  எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 

கட்சிக்கு எதிராக என்னால் முன்வைக்கப்பட்ட  கருத்துக்களுக்கு  சேனாதிராஜா என் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்தும். முதலும் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டு பின்னர் தேர்தல் காரணமாக எடுக்கவில்லையென கூறினார்கள்.

சேனாதிராஜா போன்றோர் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயல்படுவதாலே அவ்வாறு கூறுகின்றேன். அரசியல் குழு, மத்திய குழு போன்றன சுமந்திரனின் செயற்பாட்டிற்கு பச்சை கொடி காட்டி அமைதி காக்கின்றார்கள். ஆனால் அவர்களிற்கு அவ்வாறன்று.

எப்பொழுதும் ஒரு கட்சி கூட்டமைப்பாக முடியாது. ஆனால் அவர்கள் தேர்தலுக்கு வாக்கு கேட்கும் பொழுது கூட்டமைப்பு என்று வாக்கு கேட்டு மக்களை ஏமாற்றுகின்றார்கள்.  தமிழரசு கட்சியிலோ அல்லது பதவியிலோ இருக்க வேண்டிய அவசியமோ தேவையோ எனக்கில்லை.

13 ஆண்டுகளாக எதனையும் கேட்காத ஒருவனாயின் அது நானே. கட்சியின் இன்றைய நிலைக்கு காரணம் திரு. சம்மந்தனும் தற்போதைய தமிழரசு கட்சியின் பேச்சளாராக தானே பதவியினை எடுத்துக் கொண்ட  சுமந்திரனுமே காரணம். கொள்கை ரீதியாக பிழையாயின் என்னுடன் யாரும் விவாதிக்கலாம். நான் மன்னிப்பு கேட்பேன். உங்கள் மேல் பிழையாயின் அனைத்தையும் காலி செய்து கொண்டு செல்லுங்கள். 

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடிய 140 தாய்மார் காணாமல் போயுள்ளனர். இருப்பவர்களும் காணாமல் போவதோடு இந்த பிரைச்சினையும் காணாமல் போய்விடும். சுமந்திரன் போன்றோர் இழப்பினையோ மக்களின் வேதனையினையோ அனுபவிக்காதவர்கள். அவர்களிற்கு அரசியல் சேவை என்பதை தாண்டி தொழிலாகிவிட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கிய தலைவனை இல்லையென கூறியவர் சம்மந்தன். 2009 ஆம் ஆண்டு தொடக்கம் சம்மந்தனும் சுமந்திரனும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

சுமந்திரன் கூறினார் தானும் சம்மந்தனும் மட்டுமே தேசிய கொடியினை மதிப்பதாக. நாட்டின் பிரைஜை என்ற வகையில் நானும் மதிக்கின்றேன். நீங்கள் என்னவாயினும் செய்யுங்கள் எம்மை மிதிப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது.

மேலும் அவர் தெரிவிக்கையில், 

நாடாளுமன்றத்தினை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கும் நிலையில், அது கலைக்கப்பட மாட்டாது என்றும் அவ்வாறு கலைக்கப்பட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதி எனவும் 

சட்டத்தரணி தவராசா கருத்து வெளியிட்டுள்ளார். 

இன்று அரசியலானது தேவையாகவும் தொழிலாகவும் செய்யப்படும் வகையில் என்னை பொறுத்த வரை நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது. ஆனால் கலைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் ஆசை.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டு ஆகாஸ் வரை இருப்பார் என்பதை நாம்  மறக்க கூடாது.

அவர் நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்படவில்லை. மாறாக  அரசியலமைப்பாலே தெரிவு செய்யப்பட்டார். 

சரியோ பிழையோ ஜனாதிபதியாக இருந்து ராஜபக்ஷர்களின் நன்றிக்காக,  ராஜபக்ஷர்கள்  குடும்பங்களை ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பதனையும் நாம்  ஒத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டினை விட்டு தப்பியோடியவர் மீண்டும் அதே நாட்டிற்கு வந்த வரலாறு உலகிலுள்ள எந்த நாட்டிலும் இடம் பெறாது.  அந்த பெருமையும் இலங்கைக்கே உரியது.  

2024 ஆம் ஆண்டு ஆகாஸ் வரை அவரே ஜனாதிபதியாக இருப்பதால் இயன்றளவு அவரை ஆதரித்து செயற்பட வேண்டும் என்பதே எமது  வேண்டுகோள். மாறாக அதில் அரசியல் அரசியல் செய்வது பயனற்றது. 

உள்ளுராட்சிமன்ற  தேர்தல் முடிவோ அல்லது பாராளுமனறமானது கலைக்கப்படுவதோ ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி பதவியினை  பாதிக்க மாட்டாது, அவரே ஜனாதிபதி.எனவும் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் மற்றும் சம்மந்தன் தமிழ் மக்களை மிதிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது - தவராசா எச்சரிக்கை SamugamMedia சேனாதிராஜா போன்றோர் தமிழ் தேசியாதிக்கெதிராக செயற்படுவதாகவும், சம்மந்தன் மற்றும் சுமந்திரன் அரசியலை சேவை இன்றி தொழிலாக செய்து ஏமாற்றி வருவதாகவும் சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியாளர்கள்  எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில், கட்சிக்கு எதிராக என்னால் முன்வைக்கப்பட்ட  கருத்துக்களுக்கு  சேனாதிராஜா என் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்தும். முதலும் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டு பின்னர் தேர்தல் காரணமாக எடுக்கவில்லையென கூறினார்கள்.சேனாதிராஜா போன்றோர் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயல்படுவதாலே அவ்வாறு கூறுகின்றேன். அரசியல் குழு, மத்திய குழு போன்றன சுமந்திரனின் செயற்பாட்டிற்கு பச்சை கொடி காட்டி அமைதி காக்கின்றார்கள். ஆனால் அவர்களிற்கு அவ்வாறன்று.எப்பொழுதும் ஒரு கட்சி கூட்டமைப்பாக முடியாது. ஆனால் அவர்கள் தேர்தலுக்கு வாக்கு கேட்கும் பொழுது கூட்டமைப்பு என்று வாக்கு கேட்டு மக்களை ஏமாற்றுகின்றார்கள்.  தமிழரசு கட்சியிலோ அல்லது பதவியிலோ இருக்க வேண்டிய அவசியமோ தேவையோ எனக்கில்லை.13 ஆண்டுகளாக எதனையும் கேட்காத ஒருவனாயின் அது நானே. கட்சியின் இன்றைய நிலைக்கு காரணம் திரு. சம்மந்தனும் தற்போதைய தமிழரசு கட்சியின் பேச்சளாராக தானே பதவியினை எடுத்துக் கொண்ட  சுமந்திரனுமே காரணம். கொள்கை ரீதியாக பிழையாயின் என்னுடன் யாரும் விவாதிக்கலாம். நான் மன்னிப்பு கேட்பேன். உங்கள் மேல் பிழையாயின் அனைத்தையும் காலி செய்து கொண்டு செல்லுங்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடிய 140 தாய்மார் காணாமல் போயுள்ளனர். இருப்பவர்களும் காணாமல் போவதோடு இந்த பிரைச்சினையும் காணாமல் போய்விடும். சுமந்திரன் போன்றோர் இழப்பினையோ மக்களின் வேதனையினையோ அனுபவிக்காதவர்கள். அவர்களிற்கு அரசியல் சேவை என்பதை தாண்டி தொழிலாகிவிட்டது.தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கிய தலைவனை இல்லையென கூறியவர் சம்மந்தன். 2009 ஆம் ஆண்டு தொடக்கம் சம்மந்தனும் சுமந்திரனும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.சுமந்திரன் கூறினார் தானும் சம்மந்தனும் மட்டுமே தேசிய கொடியினை மதிப்பதாக. நாட்டின் பிரைஜை என்ற வகையில் நானும் மதிக்கின்றேன். நீங்கள் என்னவாயினும் செய்யுங்கள் எம்மை மிதிப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது.மேலும் அவர் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தினை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கும் நிலையில், அது கலைக்கப்பட மாட்டாது என்றும் அவ்வாறு கலைக்கப்பட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதி எனவும் சட்டத்தரணி தவராசா கருத்து வெளியிட்டுள்ளார். இன்று அரசியலானது தேவையாகவும் தொழிலாகவும் செய்யப்படும் வகையில் என்னை பொறுத்த வரை நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது. ஆனால் கலைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் ஆசை.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டு ஆகாஸ் வரை இருப்பார் என்பதை நாம்  மறக்க கூடாது.அவர் நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்படவில்லை. மாறாக  அரசியலமைப்பாலே தெரிவு செய்யப்பட்டார். சரியோ பிழையோ ஜனாதிபதியாக இருந்து ராஜபக்ஷர்களின் நன்றிக்காக,  ராஜபக்ஷர்கள்  குடும்பங்களை ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பதனையும் நாம்  ஒத்துக்கொள்ள வேண்டும்.நாட்டினை விட்டு தப்பியோடியவர் மீண்டும் அதே நாட்டிற்கு வந்த வரலாறு உலகிலுள்ள எந்த நாட்டிலும் இடம் பெறாது.  அந்த பெருமையும் இலங்கைக்கே உரியது.  2024 ஆம் ஆண்டு ஆகாஸ் வரை அவரே ஜனாதிபதியாக இருப்பதால் இயன்றளவு அவரை ஆதரித்து செயற்பட வேண்டும் என்பதே எமது  வேண்டுகோள். மாறாக அதில் அரசியல் அரசியல் செய்வது பயனற்றது. உள்ளுராட்சிமன்ற  தேர்தல் முடிவோ அல்லது பாராளுமனறமானது கலைக்கப்படுவதோ ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி பதவியினை  பாதிக்க மாட்டாது, அவரே ஜனாதிபதி.எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement