தமிழ் காமெடி படத்தில் இணையவுள்ள சன்னி லியோன்!

171

தமிழில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ்வுடன்,பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பாலிவுட்டில் பல படங்களில், பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.

தமிழ் இளைஞர்கள் மத்தியில் இதன் மூலம் புகழ் பெற்றார்.

இந்நிலையில், யுவன் இயக்கும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்தினை வி4யு மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதேவேளை, இப்படத்தில் சதீஷ், மொட்டை ராஜேந்திரன் மற்றும் ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.