சூப்பர் ஸ்டார்: தூக்கியெறிந்த முன்னணி நடிகர்; தமிழன்டா என கொண்டாடி தீர்க்கும் சீமானின் தம்பிகள்; யாரந்த நடிகர் தெரியுமா?

265

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் சிம்பு, இவர் எந்த அளவிற்கு பிரபலமோ அந்தளவிற்கு சர்ச்சைகளுக்கும் பிடித்த நடிகர்.

இவர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர், இதனாலேயே அவர் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார், சில காலம் திரைப்படங்கள் நடிப்பதிலிருந்தே ஒதுங்கியிருந்த நிலையில் மீண்டும் தற்போது மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

தவிர, தான் தமிழன் என்பதில், பெரும் பெருமை கொள்பவர் சிம்பு, தமிழ், தமிழர்களுக்கு ஒரு பிரச்சினைகளென்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பவர், இதனாலேயே நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சிம்புவிற்கு தம்பியானார்.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனனின் இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், அந்த திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பை வைக்க முடிவு செய்து, ரியல் சூப்பர் ஸ்டார் ரஜினியிடமும் சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பை சிம்பு நடிக்கவிருக்கும் தனது திரைப்படத்தில் வைக்க அனுமதியும் வாங்கியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

அதனை தொடர்ந்து தனது தலைப்பு தொடர்பில் சிம்புவை சந்தித்து இயக்குனர் கௌதம் மேனன் நீங்கள் நடிக்கும் எனது திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் என பெயர் வைக்கவிருக்கிறேன், அதற்கான அனுமதியையும் ரஜினி அவர்களிடம் பெற்று விட்டேன் என கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த சிம்பு, எனது திரைப்படங்களின் தலைப்பை தமிழில் மட்டுமே வைத்து வருகிறேன், இந்நிலையில் சூப்பர் ஸ்டார் என்கின்ற ஆங்கில பெயரை வைக்க வேண்டாமென கூறியுள்ளார்.

இந்த தகவலை தமிழக சினிமா பத்திரிகைகளின் ஊடகவியலாளர்கள் வெளியிட்டிருக்கின்ற நிலையில், தலைவா, தமிழா நீங்கள் வேற லெவல் தமிழுக்காக சூப்பர் ஸ்டாரையே தூக்கியெறிந்து விட்டீர்களே என அவரது ரசிகர்களும், நாம் தமிழர் சீமானின் தம்பிகளும் கொண்டாடி வருகின்றனர்.