ஆறு வயது சிறுமியை பலியெடுத்த நீச்சல் தடாகம்!

360

மட்டக்களப்பு – பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்தார்.

கண்டி, ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சியாம் செய்னப் எனும் சிறுமியே உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேலும், கண்டி – ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது .

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: