மருத்துவம் சாரா 15 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் நிறைவு!

81

தாதியர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் இடைக்கால பணியாளர்கள் உட்பட 15 மருத்துவ சாரா தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

விசேட சேவைக் கொடுப்பனவை ரூ.10,000 ஆக அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த இரு தினங்களாக பல வைத்தியசாலைகளில் இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

முறையான கலந்துரையாடலை முன்னெடுக்கத் தவறினால், ஏழு நாட்களின் பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

சுகாதாரப் பணியாளர்கள் இன்று பணிக்குத் திரும்புவார்கள் என்றும், பொது மக்கள் வழக்கம் போல் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல். எம். டி. தர்மசேன நியமனம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: