எரிபொருள் விலை குறைப்பது தொடர்பில் அமைச்சரவையில் இன்று பேச்சு

310

எரிபொருள் விலையை குறைப்பது குறித்து இன்றைய தினம் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

மேலும் இது கடந்த சில தினங்களாக பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையிலேயே, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: