• Mar 29 2024

பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சி முக்கியஸ்தர்! SamugamMedia

Tamil nila / Mar 18th 2023, 9:33 pm
image

Advertisement

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். 


விசாரணைக்கான காரணங்கள் எவையும் குறிப்பிடப்படாது, இன்றையதினம் (18) அவருக்கு வழங்கப்பட்டுள்ள எழுத்துமூல அழைப்பாணையில், வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக எதிர்வரும் 2023.03.24 ஆம் திகதி, மு.ப.9.00 மணிக்கு, பரந்தனில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுக்கு சமுகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களினதும்  கௌரவ.தவிசாளர்கள் உள்ளிட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது உறுப்பினர்கள் TID யினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கட்சியின் மாவட்டக்கிளைச் செயலாளராக இருந்து சமூகநலப் பணிகளிலும், அரசியற் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் வீரவாகு விஜயகுமார் அவர்களும் தற்போது விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சி முக்கியஸ்தர் SamugamMedia இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கான காரணங்கள் எவையும் குறிப்பிடப்படாது, இன்றையதினம் (18) அவருக்கு வழங்கப்பட்டுள்ள எழுத்துமூல அழைப்பாணையில், வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக எதிர்வரும் 2023.03.24 ஆம் திகதி, மு.ப.9.00 மணிக்கு, பரந்தனில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுக்கு சமுகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களினதும்  கௌரவ.தவிசாளர்கள் உள்ளிட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது உறுப்பினர்கள் TID யினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கட்சியின் மாவட்டக்கிளைச் செயலாளராக இருந்து சமூகநலப் பணிகளிலும், அரசியற் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் வீரவாகு விஜயகுமார் அவர்களும் தற்போது விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement