முகக்கவசங்களை கையிலெடுக்க தயாராகும் தமிழகம்!

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிகத் தீவிரத் தன்மை வாய்ந்ததாக காணப்படுகின்றது.

இந்நிலையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலைமைசெயலக ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தமிழக பொதுத்துறை துணை செயலாளர் அறிவித்துள்ளார்.

அதேவேளை தமிழகத்தில் நேற்றைய அறிக்கையின் படி புதிதாக 771 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 34 லட்சத்து 63 ஆயிரத்து 068 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 38,026ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி 4,678 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை