மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்சீக் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் பெருமதி வாய்ந்த தேயிலை தூள் நேற்று முன்தினம் இரவு களவு போய் உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அத் தோட்ட முகாமையாளர் இன்று காலை பதிவு செய்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து உதவி அதிகாரி மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கடமையில் புரியும் காவலர்கள் மற்றும் தொழிற் சாலைகளில் பணிபுரிவோரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
தொடர் விசாரணை இடம் பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரி தெரிவித்தார்.
முறையாக விசாரணை நடைபெறவில்லை எனில் அத் தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் பணி பகிஸ்கரிப்பு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கின்றனர்.