• Mar 29 2024

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் - கல்வி அமைச்சருடன் இம்ரான் எம்.பி பேச்சு! samugammedia

Chithra / Jun 6th 2023, 5:29 pm
image

Advertisement

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் சம்பந்தமாகக் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவை திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சந்தித்து இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, 

இதன்பொழுது கிழக்கு மாகாணத்தில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

இருந்தபோதிலும், பல வருடங்களுக்கு முந்திய ஆளணி வெற்றிட பட்டியலே காட்டப்பட்டுள்ளதினால் விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக்கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் பலர் வெளி மாகாணங்களுக்கு நியமிப்பதற்குப் பட்டியலிடப்பட்டுள்ளமை சம்பந்தமாகவும் கல்வி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரினால் தெரிவிக்கப்பட்ட விடயங்களிலுள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்ட கல்வி அமைச்சர், விரைவில் வழங்கப்படவுள்ள நியமனத்தில் அவ்வெற்றிடங்களை முடியுமான அளவு சமப்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்ததாக இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.


கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் - கல்வி அமைச்சருடன் இம்ரான் எம்.பி பேச்சு samugammedia கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் சம்பந்தமாகக் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவை திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளார்.இந்த சந்தித்து இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இதன்பொழுது கிழக்கு மாகாணத்தில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.இருந்தபோதிலும், பல வருடங்களுக்கு முந்திய ஆளணி வெற்றிட பட்டியலே காட்டப்பட்டுள்ளதினால் விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக்கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் பலர் வெளி மாகாணங்களுக்கு நியமிப்பதற்குப் பட்டியலிடப்பட்டுள்ளமை சம்பந்தமாகவும் கல்வி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரினால் தெரிவிக்கப்பட்ட விடயங்களிலுள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்ட கல்வி அமைச்சர், விரைவில் வழங்கப்படவுள்ள நியமனத்தில் அவ்வெற்றிடங்களை முடியுமான அளவு சமப்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்ததாக இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement