• Mar 29 2024

தொழில்நுட்ப கல்லூரிகளில் கற்ற மாணவர்கள் வேலை வாய்ப்புக்களுக்காக போராட்டங்களில் ஈடுபடத் தேவையில்லை!samugammedia

Sharmi / Mar 27th 2023, 1:57 pm
image

Advertisement

எமது நிறுவனமானது மருதானை தேநீர்க் கடையில் ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு உண்டு. தற்போதைய சூழ்நிலையில் அதி நவீன தொழில்நுட்பக் கற்கைகளுடன் பல கல்லூரிகள் உள்ளன என யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

இன்றையதினம் கல்லூரியின் வைரவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்சமயம் 39 கல்விக்கூடங்கள் உள்ளன. அவற்றில்  இலங்கை முழுவதும்  9 தொழில்நுட்பக் கல்லூரிகளிலே தமிழ் பேசும் மாணவர்களுக்கான தொழில்நுட்பக் கல்லூரி என்றால் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி மட்டும் தான்

யாழ்ப்பாண  தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த வருடம் 350 க்கு மேற்ப்ட இளைஞர் யுவதிகள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர். அது பாரிய வளர்ச்சியாகக் காணப்பட்டாலும்  வளர வேண்டிய பயிற்சி நெறிகளில் வளர்ச்சியடையவில்லை.

கடந்த காலங்களில் கணிசமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகக் சென்ற நிலையில் பொருளாதாரப் பிரச்சினையின் பிற்பாடு  தற்சமயம் ஆண்களை விட அதிகமான பெண்கள் நாள்தோறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைத் தேடிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

எமது  கல்லூரி வளாகத்தை சுற்றி பல்கலைக் கழகம் உட்பட கல்வி கற்பதற்கு ஏற்றவாறு  சூழ்நிலை அமைந்துள்ளது.

பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின் பின் வேலைவாய்ப்புக்காக போராட்டங்களை மேற்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. ஆனால் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்றோருக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது.

எனவே இக் கல்லூரியின் பயன்கள் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கு அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும் என்றார்.

தொழில்நுட்ப கல்லூரிகளில் கற்ற மாணவர்கள் வேலை வாய்ப்புக்களுக்காக போராட்டங்களில் ஈடுபடத் தேவையில்லைsamugammedia எமது நிறுவனமானது மருதானை தேநீர்க் கடையில் ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு உண்டு. தற்போதைய சூழ்நிலையில் அதி நவீன தொழில்நுட்பக் கற்கைகளுடன் பல கல்லூரிகள் உள்ளன என யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் பரமேஸ்வரன் தெரிவித்தார்.இன்றையதினம் கல்லூரியின் வைரவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்சமயம் 39 கல்விக்கூடங்கள் உள்ளன. அவற்றில்  இலங்கை முழுவதும்  9 தொழில்நுட்பக் கல்லூரிகளிலே தமிழ் பேசும் மாணவர்களுக்கான தொழில்நுட்பக் கல்லூரி என்றால் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி மட்டும் தான்யாழ்ப்பாண  தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த வருடம் 350 க்கு மேற்ப்ட இளைஞர் யுவதிகள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர். அது பாரிய வளர்ச்சியாகக் காணப்பட்டாலும்  வளர வேண்டிய பயிற்சி நெறிகளில் வளர்ச்சியடையவில்லை.கடந்த காலங்களில் கணிசமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகக் சென்ற நிலையில் பொருளாதாரப் பிரச்சினையின் பிற்பாடு  தற்சமயம் ஆண்களை விட அதிகமான பெண்கள் நாள்தோறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைத் தேடிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.எமது  கல்லூரி வளாகத்தை சுற்றி பல்கலைக் கழகம் உட்பட கல்வி கற்பதற்கு ஏற்றவாறு  சூழ்நிலை அமைந்துள்ளது.பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின் பின் வேலைவாய்ப்புக்காக போராட்டங்களை மேற்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. ஆனால் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்றோருக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது.எனவே இக் கல்லூரியின் பயன்கள் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கு அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement