திருகோணமலை IOC நிலையத்தில் பதற்றம்! (படங்கள் இணைப்பு)

திருகோணமலையில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை பெற்று கொள்வதற்கென பொதுமக்களுக்கு ஒருவரிசை, அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரு வரிசை, பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு வரிசை என எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அரச உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் எவ்வாறு இப்படி எரிபொருளை விநியோகிக்க முடியும் என பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபடுவதாக செய்தியாளர் தெரிவித்தார்.

பொதுமக்களின் வரிசைகளை கவனத்திற்கொள்ளாது அரச உத்தியோகத்தர்கள் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை