இந்தியா-குஜராத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரிலுள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. 33 கொரோனா தொற்றாளர்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்த பலர் மீட்கப்பட்டு உள்ளனர். அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியாத சூழலில், இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு ராஜ்கோட்டில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிர் இழப்பு ஏற்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நிர்வாகம் செய்யுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.