தங்கமாக மாறும் மணல்: நகை கடைக்காரருக்கு நேர்ந்த பரிதாபம்!

170

மணலை உருக்கினால் தங்கமாக மாறும் என்று கூறி, 4 கிலோ மணலை ரூபாய் 50 லட்சத்துக்கு நகைக்கடைக்காரரிடம் விற்பனை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் புனேயில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளனர்.

மணலை உருக்கினால் தங்கமாக மாறும் என்று கூறி, 4 கிலோ மணலை ரூபாய் 50 லட்சத்துக்கு நகைக்கடைக்காரரிடம் விற்பனை செய்த மோசடி கும்பல் புனேயில் பிடிபட்டது.

புனே அருகேயுள்ள ஹதப்சரில், மூன்று பேர், மணலை சூடேற்றினால் தங்கமாக மாறும் என்று கூறி, ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ .49.92 லட்சம் மோசடி செய்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின்படி குற்றம் சாட்டப்பட்ட மூன்றுபேரில், ஒருவர் ஒரு வருடத்திற்கு முன்பு தங்க மோதிரத்தை வாங்க இந்த நகைக்கடைக்கு வந்திருந்தார். அவர் நகைக்கடைக்காரரின் குடும்பத்தினருடன் பழகினார், அவரின் வீட்டுக்கு குடும்ப பால் பொருட்கள், அரிசி மற்றும் பிற பொருட்களை வாங்கி தந்து உதவி செய்துள்ளார் என்று தெரிவித்தனர்.

குற்றவாளிகள் நான்கு கிலோ எடைகொண்ட மணலை, நகைக்கடைக்காரரிடம் கொடுத்ததாகவும், இந்த மணலை வங்காளத்திலிருந்து பெற்றதாகவும், மணலை எரித்ததும் அது தங்கமாக மாறும் என்றும் குற்றவாளிகள் நகைக்கடைக்காரரிடம் கூறினார்கள் என தெரிகிறது.

பின்னர் நகைக்கடைக்காரர் மணலுக்கு தீ வைத்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்.

எவ்வாறாயினும் குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: