• Sep 30 2024

யாழ்,மாநகர சபையின் உறுப்பினர்களின் சுயலாப அரசியல் அது என்கிறார் - விக்னேஸ்.! SamugamMedia

Tamil nila / Mar 1st 2023, 6:56 pm
image

Advertisement

உள்ளுர் உற்பத்திகளுக்கான வரி விலக்கை வழங்குமாறு மாநகர சபையிடம் கோரியிருந்ததாகவும் ஆனால் ஆனால் அது தற்போது மறுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற தலைவர் குலரட்ணம் விக்னேஸ் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது மாநகர சபை குழப்பகரமான நிலையில் இயங்குவதாகவும் அங்குள்ள சில மக்கள் பிரதிநிதிகள் தங்களது தனிப்பட்ட சுயலாப அரசியலுக்காக பொய்யான செய்திகளை வெளியிட்டிருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில், எனும் தொனிப்பொருளில், 13வது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் சாதகத் தன்மையை கடந்த காலங்களில் சரியான முறையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதன் காரணமாகவே இன்று இந்த கண்காட்சி முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுவதாகயாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற தலைவர் குலரட்ணம் விக்னேஸ் தெரிவித்துள்ளார்.


யாழில், இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 


இதன்போது கடந்த காலங்களில் முறையாக வரி செலுத்தபடவில்லை என்றும் ஊடகவியளாளர்கள் இதன் போது கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காலத்திலும் கண்காட்சி சம்பந்தமாக 25சதவீத வரி விலக்களிக்கப்பட்டது. 


ஆனால் ஒரு சில சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட அரசியல் நோக்க கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.  


ஊடக வாயிலாக குறித்த விடயம் அறிந்தவுடன் அனைத்து வரிக் கட்டணங்களையும் செலுத்தி முடித்துவிட்டோம். 


ஒரு சிலரின் கருத்துக்கள் இவ்வாறான பாரிய நிகழ்வை களங்கப்படுத்துவதாக அமையும். எவ்வாறாயினும் யாழ் மாநகரசபையின் பங்களிப்பு கண்காட்சியின் வெற்றிக்கு அளப்பரியதாக காணப்படுகின்றது.

யாழ்,மாநகர சபையின் உறுப்பினர்களின் சுயலாப அரசியல் அது என்கிறார் - விக்னேஸ். SamugamMedia உள்ளுர் உற்பத்திகளுக்கான வரி விலக்கை வழங்குமாறு மாநகர சபையிடம் கோரியிருந்ததாகவும் ஆனால் ஆனால் அது தற்போது மறுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற தலைவர் குலரட்ணம் விக்னேஸ் குறிப்பிட்டுள்ளார்.தற்போது மாநகர சபை குழப்பகரமான நிலையில் இயங்குவதாகவும் அங்குள்ள சில மக்கள் பிரதிநிதிகள் தங்களது தனிப்பட்ட சுயலாப அரசியலுக்காக பொய்யான செய்திகளை வெளியிட்டிருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில், எனும் தொனிப்பொருளில், 13வது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் சாதகத் தன்மையை கடந்த காலங்களில் சரியான முறையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதன் காரணமாகவே இன்று இந்த கண்காட்சி முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுவதாகயாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற தலைவர் குலரட்ணம் விக்னேஸ் தெரிவித்துள்ளார்.யாழில், இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இதன்போது கடந்த காலங்களில் முறையாக வரி செலுத்தபடவில்லை என்றும் ஊடகவியளாளர்கள் இதன் போது கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் காலத்திலும் கண்காட்சி சம்பந்தமாக 25சதவீத வரி விலக்களிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட அரசியல் நோக்க கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.  ஊடக வாயிலாக குறித்த விடயம் அறிந்தவுடன் அனைத்து வரிக் கட்டணங்களையும் செலுத்தி முடித்துவிட்டோம். ஒரு சிலரின் கருத்துக்கள் இவ்வாறான பாரிய நிகழ்வை களங்கப்படுத்துவதாக அமையும். எவ்வாறாயினும் யாழ் மாநகரசபையின் பங்களிப்பு கண்காட்சியின் வெற்றிக்கு அளப்பரியதாக காணப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement